‘நியூ இயர் ஆஃபர்’!.. ‘1 வருஷத்துக்கு தினமும் 1.5GB டேட்டா’!.. ஜியோவின் அதிரடி அறிவிப்பு..!

முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்

By Selvakumar | Dec 24, 2019 06:35 PM

ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு சலுகையை அறிவித்துள்ளது.

Reliance Jio announced 2020 Happy New Year offer, Details here

வரும் 2020-ம் ஆண்டு புதிதாக ஜியோ போன் வாங்குபவர்கள் மற்றும் ஜியோ பயனர்களுக்கு புத்தாண்டு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதில், 12 மாதங்களுக்கு 12,000 நிமிட வாய்ஸ் கால், தினமும் 1.5GB டேட்டா மற்றும் 100 எஸ்.எம்.எஸ் உள்ளிட்டவைகளை ரூ.2020 விலையில் வழங்குகிறது. இது ஜியோ ஆல் இன் ஒன் சலுகைவை விட ரூ.179 குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் புதிதாக ஜியோ போன் வாங்க விரும்புவோர் ரூ.2020 கட்டணம் செலுத்தி புதிய போன் வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனுடன் தினமும் 0.5 GB டேட்டா மொத்தம் 12 நாட்களுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : #JIO #OFFER #NEWYEAR2020