நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்து 'நள்ளிரவில் தானாக நகர்ந்து செல்லும் மர்மம்!'.. சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sivasankar K | Jan 20, 2021 09:20 PM

ஆந்திர மாநிலத்தில் நள்ளிரவில் பேருந்து ஒன்று தானாகவே நகர்ந்து சென்றுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

mysteriously Bus Moves in Midnight without driver

ஆந்திர மாநிலம் நெல்லூரில் உள்ள பேருந்து நிலையத்தில் பயணிகள் காத்திருப்பு பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்துதான் இவ்வாறு நகர்ந்துள்ளது. அத்துடன் நள்ளிரவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து பேருந்துக்குள் யாரும் இல்லாத நிலையில் பேருந்து நகர்ந்து சென்றுள்ளது.

நெல்லூருக்கு உட்பட்ட ராவூர் பேருந்து நிலையத்தில் அரசுப்பேருந்தை ஓட்டுநர் நிறுத்தி வைத்துவிட்டு சென்றுள்ளார். அதன் பிறகு தான் பேருந்து அந்த சமதளமான இடத்தில் இருந்து சிறிது தூரம் முன்னே நகர்ந்து சென்று தூணின் மீது பேருந்து மோதியுள்ளது.

ALSO READ: “கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா?”.. ‘கண்டறிய உதவிய மருத்துவமனை உரிமையாளர் கைது!’ .. ‘நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!’

எனினும் நள்ளிரவு நேரம் யாரும் இல்லாததால் விபத்து ஏதும் நிகழாமல் தடுக்கப்பட்டது. இதுகுறித்து ஆந்திர மாநில போக்குவரத்து கழகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Mysteriously Bus Moves in Midnight without driver | India News.