'ஒரு கோடி ரெண்டு கோடி இல்ல, 12 கோடி'... 'தென்காசிகாரருக்கு அடித்த ஜாக்பாட்'... ஆனா அதுலயும் ஒரு சின்ன 'ட்விஸ்ட்'!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வெங்கடேஸ்வரன் என்பவர் கடந்த 18 வருடங்களாக கேரளாவில் லாட்டரி கடை ஒன்று நடத்தி வருகிறார்.
திருவனந்தபுரத்தில் உள்ள ஏஜென்சி ஒன்றில் இருந்து இவர் இந்த லாட்டரிகளை வாங்கி, தமிழக - கேரள எல்லை பகுதியிலுள்ள ஆரியங்காவு என்னும் பகுதியில் லாட்டரி கடை வைத்து விற்பனை செய்து வருகிறார். அருகே இவரது லாட்டரி கடை உள்ளது. இவரது கடையில் லாட்டரி வாங்கிய நபர் ஒருவருக்கு முதல் பரிசான 12 கோடி ரூபாய் பரிசு அடித்துள்ளது.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு கேரளாவில் 12 கோடி ரூபாய்க்கான லாட்டரி டிக்கெட் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்த பம்பர் டிக்கெட்டிற்கான குழுக்கள் நேற்று நடைபெற்ற நிலையில், XG 358753 என்ற டிக்கெட்டுக்கு முதல் பரிசான 12 கோடி ரூபாய் அடித்துள்ளது.
அந்த நபர் யார் என விசாரித்ததில், அவர் தமிழகத்தின் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது உறுதியாகியுள்ளது. ஆனால், பரிசு விழுந்த அந்த நபர் யார் என்பது குறித்து விவரங்கள் எதுவும் சரிவர தெரியாமல் இருந்து வந்தது. இந்த பம்பர் டிக்கெட்டின் உரிமையாளர் யார் என்பதை அனைவரும் வலை வீசி தேடி வந்தனர்.
இதனையடுத்து, அந்த நபர் தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டை பகுதியை அடுத்த இரவிய தர்மபுரம் கிராமத்தை சேர்ந்த சர்பூதின் என்பவருக்கு கிடைத்துள்ளது தெரிய வந்தது. தற்போது, பரிசு பெற்றவர் தனது குடும்பத்தினருடன் கேரள மாநிலம் பத்தினம்திட்டாவிற்கு பரிசு தொகை வாங்கச் சென்றுள்ளார்.