VIDEO: ‘கொரோனாவுக்கே சவால் விடும் கொடிய நோய்!’.. ஆந்திராவில் இருக்கும் இடத்தில் இருந்தே சுருண்டு விழும் மக்கள்... வெளியான சிசிடிவி காட்சிகள்.. வீடியோ!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆந்திராவில் கோதாவரி மாவட்டம் எலுரு நகரில் அண்மையில் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

நாடு முழுவதும் அதிர்வலைகளை உண்டாக்கிய இந்த விவகாரத்தில் பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே ஒருவர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள், வித்தியாசமான குரல்களை எழுப்புவதாக தெரியவந்ததை அடுத்து, இந்த மர்ம நோய் தாக்கியவர்களின் உடலில் நிக்கல், காரீயம் ஆகிய நச்சு வேதிப்பொருட்கள் கலந்திருப்பது உலக சுகதார அமைப்பு, டெல்லி, புனே எய்ம்ஸ் மருத்துவக் குழுவினரின் மருத்துவ சோதனைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், இந்த நோயால் தாக்கப்படும் மக்கள் இருக்கும் இடத்தில் இருந்தே அடுத்தடுத்து சுருண்டு விழும் சிசிடிவி காட்சிகள் தற்போது தெலுங்கு ஊடகங்களில் வெளியாகி பதறவைத்துள்ளன.
'Disturbing visual, viewers discretion advised'

மற்ற செய்திகள்
