‘ஒரு தடவை திரும்பினா’.. ‘ஒரு புடவை அபேஸ்!’.. சிசிடிவியில் தென்பட்ட அதிர்ச்சி காட்சி... ‘பண்டிகையைக் குறிவைத்து.. சம்பவம் பண்ண வந்த பெண்கள்!’
முகப்பு > செய்திகள் > தமிழகம்பண்டிகை காலம் என்பதால் கடைத்தெருக்களில் கூட்டம் அலைமோதத் தொடங்கியுள்ளது. ஆனால் இவ்வாறான நேரங்களில் நெரிசல், நெருக்கடி மிகுந்த கடைத்தெருக்களுக்கு செல்லும் மக்கள் தங்கள் உடமைகளை பாதுகாப்புடன் வைத்திருத்தல் அவசியம்.

எப்போது எங்கிருந்து வேண்டுமானாலும் வந்து திருடர்கள் கைவரிசையக் காட்டுவார்கள். எனினும் பெரும்பாலும் இப்படியான திருட்டு போகும் சம்பவங்கள் பெண்களுக்கு தான் நடக்கும். ஆனால் மதுரையில் பெண்களே இப்படி ஒரு சம்பவத்தை செய்து அதிரவைத்துள்ளனர்.
மதுரையில் கூட்டம் குறைவாக இருக்கும் ஒரு ஜவுளிக்கடையில் ஓனர், சிசிடிவி கேமரா என எல்லாமே இருக்கும்போதே, 4 பெண்கள் இப்படி ஒரு சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர். ஆம், 2 பெண்கள் 2 ஆண்கள் என கடைக்குள் நுழைந்த அந்த 4 பேரும் கடைக்காரர்களிடம் விதவிதமான புடவைகளை காட்டச் சொல்கின்றனரே தவிர, எதையும் வாங்குவதாக தெரியவில்லை.
ஆனால் கடைக்காரர்கள் திரும்பி புடவை எடுப்பதற்குள் இந்த கும்பல் புடவையை எடுத்து ஒளித்துக் கொள்கின்றனர். ஏற்கனவே இவர்கள் சந்தேகத்தில் இருந்த கடைக்காரர்கள், இவர்கள் செய்த காரியத்தை, சிசிடிவி கேமராவில் கவனித்துவிட, சிக்கினர் அந்த சேலை திருடர்கள். அவர்களை மடக்கிப் பிடித்தபோது மளமளவென புடவைகள் அவர்களிடம் இருந்து சரிந்து விழுந்தன.
அனைவருமே 50 வயதுக்கு மேற்பட்டவர்கள். பின்னர் இந்த புடவைத் திருடர்களை கடைவாசல் வழியாக மரியாதையாக அழைத்துச் சென்று மதுரை தெற்குவாசல் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். அப்போதுதான் இந்த கும்பலின் பிரதான வேலையாக சேலை திருட்டு இருந்து வந்தது தெரியவந்தது.

மற்ற செய்திகள்
