சார் டிக்கெட் எடுக்கணும் ‘கண்டக்டர்’ எங்கே?.. உடனே பின்னாடி திரும்பி பார்த்த டிரைவர்.. காத்திருந்த அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பேருந்தில் இருந்து கண்டக்டர் விழுந்தது தெரியாமல் 5 கிலோ மீட்டர் டிரைவர் பேருந்தை ஓட்டிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் வடக்கன்குளத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி அரசுப் பேருந்து சென்றுகொண்டு இருந்துள்ளது. பேருந்துக்குள் பணிகள் சிலர் மட்டுமே இருந்துள்ளனர். இதனை அடுத்து பேருந்து ஆரல்வாய்மொழி வந்ததும், அங்கே பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து புறப்பட்டு சென்றுள்ளது. சிறிது தூரம் சென்றதும், பேருந்தில் கண்டக்டர் இல்லை என்பது பயணிகளுக்கு தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து டிரைவரிடம் ‘சார் நாங்க டிக்கெட் எடுக்கணும் கண்டக்டர் எங்கே?’ என பயணிகள் கேட்டுள்ளனர். உடனே பின்னே திரும்பிப் பார்த்த டிரைவர், பேருந்தில் கண்டக்டர் இல்லை என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே பேருந்தை நிறுத்திவிட்டு அப்போது சாலையில் பைக்கில் வந்த ஒருவருடன் கண்டக்டரை தேடி சுமார் 5 கிலோ மீட்டர் சென்றுள்ளார். அதற்குள் மூப்பந்தல் அருகே காயங்களுடன் விழுந்து கிடந்த கண்டக்டர் மகாலிங்கத்தை மீட்டு அப்பகுதி மக்கள் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
பேருந்தின் படிக்கட்டில் நின்றுகொண்டிருந்த கண்டக்டர் மகாலிங்கம், எதிர்பாராதவிதமாக பேருந்தில் இருந்து கீழே விழுந்துள்ளார். இதைக் கவனிக்காத டிரைவர் பேருந்தை நிறுத்தாமல் சென்றுள்ளார். இதனை அடுத்து காயமடைந்த கண்டக்டர் மகாலிங்கத்தை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதனை அறிந்த டிரைவர் பேருந்தை டிப்போவில் நிறுத்திவிட்டு கண்டக்டரை பார்க்க மருத்துவமனைக்கு விரைந்து சென்றுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
