'இனிமேல் ரூம் தேடி அலைய தேவையில்ல...' 'ஹாயா பஸ்லயே படுத்துக்கலாம்...' 'ஒரு நாளைக்கு ரூ.100 வாடகை...' - மூணாறில் கலக்கும் லாட்ஜ் பஸ்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளா மூணாறுக்கு வரும் சுற்றுலா பயணிகள் பயணித்து மற்றும் உறங்க கேஎஸ்ஆர்டிசி பஸ் குறைந்த செலவில் புதுவித ஐடியா ஒன்றை செயல்படுத்திவருகின்றனர்.

கேரளாவின் கேஎஸ்ஆர்டிசி பஸ் மூணாறுக்கு வரும் சுற்றுலா பயணிகள் தங்கள் பேருந்தில் பயணிப்பது மட்டுமில்லாமல் இனி அறைகள் தேடி அலைய வேண்டிய வேலையை குறைத்துள்ளது.
அதாவது இனி கேஎஸ்ஆர்டிசி பஸ்களில் பயணிப்போர் பஸ்களிலேயே தங்கி ஹாயாக ஓய்வெடுக்கலாம். இதற்காக புதிய ஏசி பஸ்சில் ஒரேநேரத்தில் 16 பேர் தங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பஸ் மூணாறு டிப்போவில் பார்க்கிங் செய்யப்பட்டிருக்கும் எனவும், பஸ்சில் தங்கியிருப்பவர்கள் டிப்போவில் உள்ள கழிவறைகளை பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
பேருந்தின் ஒரு படுக்கைக்கு ஒரு நாளைக்கு ரூ.100 மட்டுமே வாடகை வசூலிக்கப்படுகிறது. ஆனால் கம்பளி ேபார்வை தேவைப்பட்டால் கூடுதலாக ரூ50 செலுத்த வேண்டும். மூணாறு டெப்போ கவுண்டரில் முன்பதிவு செய்யலாம். பணம் செலுத்தி மாலை 5 மணிக்கு பஸ்சில் ஏறி படுத்துக்கலாம். ரூ1,600 செலுத்தி மொத்த பஸ்சையும் நமது குடும்பத்துக்காக முன்பதிவு செய்யலாம்.
சுற்றுலா பயணிகள் அரசு பஸ்களில் தங்க ஏற்பாடு செய்யப்படுவது கேரள மாநிலத்தில் இதுவே முதல்முறையாகும். முதற்கட்டமாக 2 ஏசி பேருந்துகளும், ஒவ்வொன்றிலும் 16 படுக்கைகள் உள்ளன. இந்த பஸ்கள் நவம்பர் 14 முதல் சுற்றுலா பயணிகளுக்கு, தினசரி வாடகையாக விடப்பட்டு வருகின்றன. 2 பஸ்களும் பெரும்பாலான நாட்களில் நிரம்பி வழிகின்றன.
கேஎஸ்ஆர்டிசி எம்.டி. பிஜூ பிரபாகரன் மனதில் உதித்த இந்த யோசனையை வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளதை அனைவரும் பாராட்டிவருகின்றனர்

மற்ற செய்திகள்
