‘அடுத்தவங்க இடத்துல குப்பைய கொட்டுனதும் இல்லாம’.. ‘உறைய வைத்த’ குப்பையில இருந்த அந்த ‘ஐட்டம்!’.. சிசிடிவி கேமரா இருக்குனு தெரிஞ்சும்.. ‘ஆப்பசைத்த குரங்கு’ கதையான சம்பவம்!
முகப்பு > செய்திகள் > உலகம்பிரிட்டனில் சிசிடிவி கேமரா தன்னை கண்காணிப்பதை அறியாத ஒருவர் குப்பையை வேறொருவர் இடத்தில் கொண்டு சென்று கொட்டிய சம்பவம் வெளிவந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் அவர் கொட்டிய குப்பையில் இருந்தவை கஞ்சா செடிகள் என்பதும் அந்த சிசிடிவி காட்சிகளில் தெரியவந்ததை அடுத்து இந்த சம்பவம் பெரும் பரபரப்பாகியுள்ளது. பிரிட்டனின் kent பகுதி கவுன்சிலரான Wythall Adam என்பவரது நிலத்தில்தான் முன்பின் தெரியாத ஒருவர் குப்பைக்குள் இருந்த கஞ்சா செடிகளை அப்படியே கொண்டுசென்று கொட்டியுள்ளார்.
அவரை கையும் களவுமாக பிடித்து நீ என்ன செய்கிறாய் ? போலீசை அழைக்கவா? என்று கேட்டதும் காரில் வந்திருந்த அவர் உடனடியாக தன் காரில் ஏறி தப்பிச் சென்றுவிட்டார். இதனை அடுத்து போலீசாரிடம் அந்த கேமரா காட்சிகளை காண்பித்த Adam போலீசாரிடம் விஷயத்தைக் கூற, அந்த நபர் போலீசாரால் தேடப்பட்டு வருகிறார். அந்த நபர் குப்பை கொட்டிய இடத்தில், ‘நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்’ என்கிற போர்டு கூட இருந்ததுள்ளது.
அப்படி அதை பார்த்தும் அந்த நபர் இப்படி செய்திருக்கிறார் என்றால் இதெல்லாம் தெரிந்தே குரங்கு ஆப்பை அசைத்த கதைதான் என்று பலரும் கிண்டலாக விமர்சித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
