'ஓஹோ, பொண்ணோட அப்பா ஆடிட்டரா'... 'இளைஞரை சந்தித்தபோது தொலைந்த சாவி'... மொத்த குடும்பத்திற்கே காத்திருந்த ஷாக்கிங் கிளைமாக்ஸ்!
முகப்பு > செய்திகள் > இந்தியாமும்பை அருகே கோலாபா என்னும் பகுதியைச் சேர்ந்த ஆடிட்டர் ஒருவர், அவரது குடும்பத்தினருடன் சில தினங்களுக்கு முன் சுற்றுலா சென்றுள்ளார்.

அந்த ஆடிட்டரின் குடும்பத்தினர், சுற்றுலா முடித்து விட்டு கடந்த வாரம் வீடு திரும்பியிருந்த நிலையில், அவர்கள் அனைவருக்கும் மிகப் பெரிய அதிர்ச்சி ஒன்று காத்திருந்தது. வீட்டிலிருந்த தங்க நகைகள், ஐ போன், பணம் என மொத்தம் 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருட்டு போயுள்ள நிலையில், ஆடிட்டர் இதுகுறித்து உடனடியாக போலீசாரிடம் புகாரளித்தனர்.
இது தொடர்பாக, போலீசார் விசாரணையை மேற்கொண்ட நிலையில், ஆடிட்டரின் மக்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது பல அதிர்ச்சியூட்டும் தகவல் வெளிவந்தது. முதலில், அந்த பெண் எதையோ மறைக்க முற்பட்ட நிலையில், பின்னர் போலீசாரிடம் அனைத்தையும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அந்த இளம்பெண் இன்ஸ்டாகிராம் மூலம் இளைஞர் ஒருவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். அப்போது, ஒருமுறை அந்த இளைஞரைத் தனியே சந்தித்த போது, வீட்டின் டூப்ளிகட் சாவியை தொலைத்துள்ளார். அந்த இளைஞரின் அருகில் இருந்த போது தான் சாவி தொலைந்து போயுள்ளது. இந்த சம்பவம் அந்த இளம்பெண்ணுக்குத் தெரியவில்லை.
இளம்பெண் கூறிய தகவலின் படி, அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். முன்னதாக, நட்பாக பழகி வந்த பெண்ணின் வீட்டுச் சாவி தனக்கு கிடைத்த நிலையில், இளம்பெண் தனது குடும்பத்தினருடன் சுற்றுலா செல்வதை அறிந்த இளைஞர், தக்க சமயத்தில் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடித்துச் சென்றுள்ளார். கைது செய்த இளைஞரிடம் இருந்து, சுமார் ஒரு லட்ச ரூபாய் மற்றும் ஐ போன் ஆகியவை இதுவரை மீட்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
