நாம கண்டிப்பா ‘ஜெயிப்போம்’.. சிஎஸ்கே ‘ஸ்டார்’ ப்ளேயர் போட்ட ‘இன்ஸ்பைரிங்’ INSTA ஸ்டோரி..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Oct 21, 2020 11:13 AM

நாம் கண்டிப்பாக மறுபடியும் வெல்வோம் என சென்னை அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளார்.

We can win, Jadeja’s inspirational Insta story after CSK loss

நடைபெற்று வரும் 13-வது சீசன் ஐபிஎல் தொடரில் சென்னை அணி, இதுவரை விளையாடிய 10 போட்டிகளில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. ஐபிஎல் தொடர்களில் ராஜா போல வலம் வந்த சிஎஸ்கே, இந்த வருடம் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. வீரர்களின் தேர்வு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்காதது என சென்னை அணி பல விமர்சனங்களை பெற்று வருகிறது.

We can win, Jadeja’s inspirational Insta story after CSK loss

முன்னதாக ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த பின் பேசிய கேப்டன் தோனி, அணியில் இளம்வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை என தெரிவித்தார். தோனியின் இந்த பேச்சு கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரரும், தமிழருமான ஸ்ரீகாந்த், ‘இளைஞர்களுக்கு ஒரே ஒரு போட்டியில் வாய்ப்பு கொடுத்துவிட்டு ஸ்பார்க் இல்லை என தோனி கூறுகிறார். அப்படியென்றால் கேதர் ஜாதவ் மற்றும் ப்யூஸ் சாவ்லாவிடம் நீங்கள் எதிர்பார்க்கும் ஸ்பார்க் இருக்கிறதா? ப்ராசஸ், ப்ராசஸ் என சொல்லி ஐபிஎல் தொடரே முடியப்போகிறது’ என மிக கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இன்னும் 4 லீக் போட்டிகளிலே உள்ளதால் சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு குறைந்துள்ளது.

We can win, Jadeja’s inspirational Insta story after CSK loss

இந்த நிலையில் சென்னை அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், ‘நம்மால் வெல்ல முடியும், நாம் கண்டிப்பாக வெல்லவோம், நாம் வெல்வோம்’ என பதிவிட்டுள்ளார்.

We can win, Jadeja’s inspirational Insta story after CSK loss

இந்த வருட ஐபிஎல் சீசனில் சென்னை அணியை பொருத்தவரை ஜடேஜாவின் ஆட்டம் சிறப்பாகவே அமைந்துள்ளது. இக்கட்டான சூழ்நிலையில் அணி இருந்தபோதெல்லாம் ரன்களை எடுத்து கொடுத்துள்ளார். டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் வீசிய கடைசி ஓவரை தவிர மற்ற போட்டிகளில் ஜடேஜா சிறப்பான பந்துவீச்சையே வெளிப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஜடேஜா பதிவிட்டுருக்கும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ரசிகர்களுக்கு புது நம்பிக்கையை கொடுத்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. We can win, Jadeja’s inspirational Insta story after CSK loss | Sports News.