“புயலுக்கு முன்னே அமைதி”.. 'ஐபிஎல் வீரரின் வைரல் ஆகும்'.. அணி நிர்வாகம் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் ஃபோட்டோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமுதல் தகுதிச்சுற்றில் வெற்றி பெற்று நேரடியாக வரும் 10ம் தேதி நடைபெறவுள்ள இறுதிச்சுற்றுக்கு மும்பை இந்தியன்ஸ் அணி முன்னேறியுள்ளது.

இதில் இந்த ஐபிஎல் சீசனில் முக்கியமான பங்கு வகித்து வரும் கீரன் பொல்லார்ட் கேப்டன் ரோகித் சர்மா இல்லாத போட்டிகளில் மும்பை அணியை சிறப்பாக வழிநடத்தினார். இந்நிலையில் இவர் தனது மனைவியின் மடியில் படுத்துக்கொண்டு ஓய்வெடுக்கும்படத்தை மும்பை இந்தியன்ஸ் அணி தமது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
முன்னதாக காயம் காரணமாக மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா நடுவில் 4 போட்டிகளில் இடம்பெறாத சமயம் தற்காலிக கேப்டனாக பொறுப்பேற்று வெற்றிகளை குவித்தார். வரும் செவ்வாய்க்கிழமை துபாய் சர்வதேச மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெறவுள்ள நிலையில், அதில் ஆடப்போகும் மும்பை வீரர்கள் சிலர் ஓய்வையும், சிலர் பயிற்சிகளை மேற்கொண்டும் வருகின்றனர்.
இந்நிலையில்தான், மும்பை அணி, கீரன் பொல்லார்ட் தன்னுடைய மனைவியின் மடியில் படுத்து ஓய்வெடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “புயலுக்கு முன்னே அமைதி” என்கிற கேப்ஷனுடன் வெளியிட்டது. இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
