‘நாங்க ரெடியா இருக்கோம்’... ‘நியூ லுக்குடன் இன்ஸ்டாவில் பகிர்ந்த ஸ்டார் பிளேயர்’... ‘நீங்க அவர மாதிரி இருக்கீங்க’... 'பாராட்டிய இளம் வீரர்'!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபிளே ஆஃப் சுற்றின் முதல் போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில், மும்பை அணியின் நட்சத்திர வீரர் பும்ரா புதிய தோற்றத்திற்கு மாறியுள்ளதை, அந்த அணியின் மற்றொரு வீரர் பாராட்டியுள்ளார்.

ஐபிஎல் 2020 சீசனின் பிளே-ஆஃப் சுற்றிற்கு சென்ற முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் உள்ளது. லீக் போட்டிகளை சிறப்பாக முடித்துள்ள அந்த அணி இன்றைய தகுதிச்சுற்றுப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் மோதவுள்ளது. இந்நிலையில் போட்டிக்கு முன்னதாக தன்னுடைய லுக்கை முழுமையாக மாற்றியுள்ளார் அணியின் ஜஸ்பிரீத் பும்ரா.
இந்த புதிய லுக்கை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தம்ஸ் அப் முத்திரை மற்றும் அழகான சிரிப்புடன் வெளியிட்டுள்ளார் பும்ரா. மேலும் இதுகுறித்த வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். தான் மற்றும் தன்னுடைய அணி டெல்லியை எதிர்கொள்ள, தயாராக உள்ளதாகவும், மைதானத்தில் பார்க்கலாம் என்று கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோவை பார்த்த மும்பை அணி வீரர் குருணால் பாண்டியா, கால்பந்தாட்ட ஜாம்பவான் ஸ்லாடன் இப்ராஹிமோவிக் போன்று பும்ரா உள்ளதாக பாராட்டு தெரிவித்துள்ளார். இந்த ஐபிஎல் சீசனில் தென்னாப்பிரிக்க வீரர் காகிசோ ரபடாவிற்கு அடுத்தபடியாக 13 போட்டிகளில் விளையாடி 23 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார் ஜஸ்பிரீத் பும்ரா. இன்றைய தகுதிச்சுற்று போட்டியில் அவர் விக்கெட்டுகளை எடுத்து ரபடாவை முந்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

மற்ற செய்திகள்
