'எனக்கு 'இந்த' சுதந்திரம் கூட இல்லையா'?.. கலாய்ப்பதாக நினைத்து... 'இன்ஸ்டாகிராம்' நிறுவனத்தையே அதிரவைத்த 'பிரபல ஆபாச பட நடிகை'!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Behindwoods News Bureau | Dec 18, 2020 02:39 PM

பிரபல ஆபாச பட நடிகை கேந்திர சுந்தர்லேண்ட், இன்ஸ்டாகிராம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுடன் தனக்கு ரகசிய உறவு உள்ளதாக கூறியதையடுத்து, அவரது இன்ஸ்டாகிராம் சமூகவலைத்தள கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

adult film star kendra sunderland account banned joke instagram ceo

அமெரிக்காவின் ஆபாச திரைப்பட நடிகையான கேந்திர சுந்தர்லேண்ட் (25), சமீபத்தில் சமூக வலைதள பக்கத்தில், இன்ஸ்டாகிராமின் தலைமை நிர்வாக அதிகாரியான ஆடம் மொசெய்ரியுடன் தனக்கு ரகசிய உறவு இருப்பதாக கூறினார்.

அது எப்படி ஏற்பட்டது என்று கூறிய அவர் தனது ஆபாச புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாவதற்கு அவர்தான் காரணம் என்றும், அதனால், தனக்கு இந்த பாக்கியம் கிடைத்ததாகவும் கூறினார்.

இவரை இன்ஸ்டாகிராமில் உலகம் முழுவதும் சுமார் 22 லட்சம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். எனினும், தற்போது இன்ஸ்டாகிராம் நிறுவனம், கேந்திர சுந்தர்லேண்டின் இன்ஸ்டாகிராம் கணக்கை முடக்கியுள்ளது.

இது குறித்து கேந்திர சுந்தர்லேண்ட் தனது ட்விட்டரில் கூறி இருப்பதாவது, சமூக ஊடகங்களில் நாம் அனைவரும் சுதந்திரமாக செயல்படுகிறோம். அதைத் தான் அனைவரும் விரும்புகிறோம்.

பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான பாகுபாட்டை தடுத்து நிறுத்த வேண்டும். இதைத்தான் என்னை போன்றவர்கள் விரும்புகிறோம். ஆனால், எனது இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்டதை அறிந்து நீங்கள் மகிழ்ச்சியடைந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

நான் வெளியிட்ட ஆபாச புகைப்படத்தால் டிக்டாக்கில் முடக்கப்பட்டேன். எனது அனைத்து பதிவுகளும் பாலியல் தொழிலாளர்களின் நலனுக்காக இருந்தது. நான் அவர்களுக்காக குரல் கொடுக்கிறேன். எனது போராட்டத்தை தொடருவேன் என்று கூறியுள்ளார்.

இது குறித்து இன்ஸ்டாகிராம் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், உலகெங்கிலும் கோடிக்கணக்கான மக்கள் இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தி வருகிறார்கள். சில நேரங்களில் தவறுகள் நடந்துவிடுகின்றன.

கேந்திர சுந்தர்லேண்ட், எங்களது கொள்கை விதிகளை மீறிவிட்டார். அதனால், இப்போது நாங்கள் அவர்களின் கணக்கை முடக்கிவிட்டோம். அவருக்கும் எங்கள் நிறுவன அதிகாரிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று கூறியுள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Adult film star kendra sunderland account banned joke instagram ceo | World News.