"எவ்வளவு நகைனாலும் பரவால்ல!".. 25 நாட்கள் போலீஸாரை சுற்றலில் விட்ட... ‘பணிநீக்கம்’ செய்யப்பட்ட பேங்க் ஊழியர் செய்த ‘சம்பவம்’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தேனி மாவட்டம் தேவதானப்பட்டி கம்பளிநாடார் பகுதியைச் சேர்ந்த வாஜித் அகமது (27), தன்னிடம் இருந்த 27 பவுன் நகைகளை கடன் பிரச்சனைக்காக விற்க செய்யத் திட்டமிட்டார். இதற்காக நண்பர் ஒருவர் மூலம் தேனி, போடி சகாதேவன் தெருவைச் சேர்ந்த லலித்குமார் என்பவருடன் அறிமுகமானார்.

ஆனால், போடி இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக இருப்பதாக வாஜித் அகமதுவிடம் கூறிய லலித்குமார் நகைகளை எடுத்து வரச் சொல்ல, அவர் பேசியதை நம்பி நகைகளை இருசக்கர வாகன கவரில் வைத்து எடுத்து வந்த வாஜித் அகமதுவிடம் லலித் குமார் பேச்சுக் கொடுத்துக் கொண்டே, இருசக்கர வாகன கவரில் இருந்த நகைகளை எடுத்துக்கொண்டு, அங்கிருந்து சென்றுவிட்டார்.
நகைகளை லலித்குமார் களவாடியதை சிறிது நேரத்தில் அறிந்த வாஜித் அகமது, போடி நகர் காவல்நிலையத்தில் அளித்த புகாரை அடுத்து 25 நாட்கள் போலீஸாரின் தீவிர தேடுதலுக்கு பிறகு லலித்குமார் சிக்கினார். போலீஸார் தரப்பில் இதுபற்றி கூறும்போது, “எவ்வளவு நகைனாலும் பரவால்ல. விற்றுத் தர்றேன்” என லலித்குமார் சொன்னதைக் கேட்ட வாஜித் அகமது, அதை நம்பி ஏமாந்துள்ளார்.
அத்துடன் போடி இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றியபோது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதால், வங்கி நிர்வாகம் லலித்குமாரை பணி நீக்கம் செய்திருக்கிறது. இன்னும் எத்தனை பேரிடம் இப்படி லலித்குமார் கைவரிசை காட்டியுள்ளார் என்பது விசாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
