#VIDEO: 'பட்டத்து இளவரசருடன் போட்டா போட்டி!'.. 'இன்னும் பயிற்சி வேண்டுமோ?'.. ‘சேட்டைக்கார’ நெருப்புக் கோழிகளின் ‘வைரல் வீடியோ’!
முகப்பு > செய்திகள் > உலகம்துபாய் பட்டத்து இளவரசர் சாலையில் தனது குழுவினருடன் சைக்கிளில் பயணம் மேற்கொண்ட போது அங்கு வந்த இரண்டு நெருப்புக்கோழிகள் செய்த சேட்டை இணையதளத்தில் வைரலாகியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்புதான், துபாய் பட்டத்து இளவரசர் Sheikh Hamdan bin Mohammed bin Rashid Al Maktoum காரில் குருவி கூடுகட்டி வாழ்ந்த காரணத்தால் அதை கலைக்கக் கூடாது என்பதற்காக காரினை எடுக்காமல் அப்படியே விட்டு விட்டதால் வைரலானார்.
துபாயில் அல் மர்மும் என்கிற ஒரு இயற்கை வனப்பகுதியில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட காடுகள் மற்றும் பாலைவன ஈரநிலங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
இங்குதான் உலகின் மிகப்பிரபலமான அல் குத்ரா ஏரிப்பகுதி இருக்கிறது. இங்கு சைக்கிள் பாதை, நடைபாதை, புகைப்படங்கள் எடுப்பதற்கான அம்சங்கள் உள்ளிட்டவற்றால், இந்த பகுதிகளில் பலரும் அடிக்கடி பயணம் செய்வது வழக்கம்.
இந்த நிலையில்தான் துபாய் பட்டத்து இளவரசர் அண்மையில் சைக்கிளில் சாலையில் தனது குழுவினருடன் பயணம் மேற்கொண்டார். அப்போது திடீரென இரண்டு நெருப்புக் கோழிகள் அவரது சைக்கிள் பாதைக்கு இணையாக ஓடி அவருடன் போட்டி போட்டிருக்கின்றன. இந்த காட்சியை அவர் தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த காட்சிகள் நெருப்புக்கோழிகளுடன் பந்தயம் நடைபெற்றது போல் இருப்பதாக இந்த காட்சிகளை பார்த்த பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதில் இளவரசர் அந்த நெருப்புக் கோழியை முந்திச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
