VIDEO: 'நான் தாங்க அவர் WIFE... நகைய கொடுங்க!'.. சினிமா உதவி இயக்குநரின் கதையில் ட்விஸ்ட் வைத்த 54 வயது பெண்மணி!!.. பகீர் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்21 சவரன் தங்க நகைக்காக மதுரையைச் சேர்ந்த ஒரு பெண் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே உள்ள கிராமம், அய்யங்கோட்டை. அந்த பகுதியைச் சேர்ந்த தங்கராஜா என்பவர், சினிமாவில் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர்.
பஞ்சு அருணாச்சலம் போன்ற பெரிய இயக்குநர்களிடம் உதவியாளராக வேலை செய்துள்ளார்.
இவர் உடல் நலம் சரியில்லாமல், கடந்த 2018ம் ஆண்டு காலமானார்.
தனிமையிலேயே வாழ்ந்த இவர், இறுதிவரை திருமணம் செய்துகொள்ளவில்லை.
மேலும், அவர் வாழ்ந்த காலத்தில், கடன் தேவைக்காக தனக்கு சொந்தமான 21 சவரன் தங்க நகைகளை வங்கியில் அடமானம் வைத்து, 3 லட்சம் ரூபாய் கடன் பெற்றுள்ளார்.
வாங்கிய கடனை முழுமையாக அடைத்து, நகைகளை மீட்கப் போகும் சூழலில் தான் அவர் மரணமடைந்துள்ளார்.
இந்நிலையில், தங்கராஜாவின் பக்கத்து வீட்டில் வசிக்கும் 54 வயதான கலா என்கிற பெண்மணிக்கு இந்த தகவல் தெரியவந்துள்ளது.
அதையடுத்து, தங்கராஜாவின் மனைவி நான் தான் என்று போலியான ஒரு சான்றிதழை தயார் செய்துள்ளார். அதுமட்டுமின்றி, தனது மகள் ராஜராஜேஸ்வரிக்கு தங்கராஜா தான் தந்தை எனவும் போலி சான்றிதழை உருவாக்கியுள்ளார்.
பின்னர், அந்த 2 போலி சான்றிதழ்களையும் வங்கியில் சமர்பித்து, 2019-இல் தங்கராஜாவின் நகைகளை பெற்றுக்கொண்டுள்ளார்.
இதற்கிடையே, தங்கராஜாவின் அண்ணன் வங்கிக்கு எதர்ச்சியாக சென்று, தம்பியின் நகைகளை பற்றி கேட்டறிந்துள்ளார்.
அப்போது, தங்கராஜாவின் மனைவி மற்றும் அவரது மகள் நகைகளை பெற்றுவிட்டதாக வங்கியில் சொன்னதும் பேரதிர்ச்சியில் உறைந்துவிட்டார்.
அதன் பின், சான்றிதழ்களை சரிபார்க்கும்போது தான் அவை போலி என்று தெரியவந்துள்ளது.
தமிழக காவல்துறையையே அதிர்க்குள்ளாக்கிய இந்த சம்பவத்தில் அடுத்து என்ன நடந்தது?.. வீடியோவில் காணுங்கள்...

மற்ற செய்திகள்
