‘அப்போ நீ பயப்படக்கூடாது’!.. ‘தோனி கொடுத்த அட்வைஸ்’!.. சிஎஸ்கே இளம்வீரர் சொன்ன சீக்ரெட்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Dec 20, 2019 11:20 AM

சென்னை அணியில் இடம் பிடித்த தமிழக வீரர் சாய் கிஷோர் பயிற்சி ஆட்டத்தில் தோனியின் அறிவுரை குறித்து தெரிவித்துள்ளார்.

Chennai Super Kings player Sai Kishore talk about MS Dhoni

ஐபிஎல் டி20 தொடரின் 13-வது சீசனுக்கான வீரர்கள் ஏலம் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் சென்னை அணி பியூஸ் சாவ்லா, ஜோஸ் ஹஜ்லேவுட், சாம் குர்ரன் உள்ளிட்ட வீரர்களை புதிதாக எடுத்தது. இதனை அடுத்து கடைசியாக தமிழக வீரர் சாய் கிஷோரை சென்னை அணி ஏலத்தில் எடுத்தது.

இந்நிலையில் சென்னை அணியின் கேப்டன் தோனி கூறிய அறிவுரை குறித்து சாய் கிஷோர் தெரிவித்துள்ளார். அதில், ‘சிஎஸ்கே நெட் பயிற்சி ஆட்டம் இண்டேர்ன்ஷிப் போல் இருக்கும். அதிலிருந்து சிலவற்றை நான் கற்றுக்கொண்டேன். ஒரு வீரர் சிக்ஸ் அடித்துவிட்டால் அடுத்த பந்தை அடிக்க சற்று பயப்படுவார். அப்போது நாமும் பயந்துவிட கூடாது. நிதானமாக சிறுது நேரம் எடுத்து பந்து வீச வேண்டும் என தோனி தெரிவித்தார். இதனால் அடுத்தடுத்த பயிற்சி ஆட்டத்தில் நிறைய என்னை மேம்படுத்திக்கொண்டேன். ஒரு பயிற்சி ஆட்டத்தில் ஒரு சிக்ஸ் கூட விட்டுக்கொடுக்காமல் பந்து வீசினேன்’ என தெரிவித்துள்ளார்.

Tags : #CSK #IPL #MSDHONI #IPL2020 #SAIKISHORE