‘176 பேருடன்’ கிளம்பிய ‘விமானம்’... புறப்பட்ட ‘சில நிமிடங்களிலேயே’ நடந்த ‘பயங்கர’ விபத்தால் ‘பரபரப்பு’...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Jan 08, 2020 10:04 AM

176 பேருடன் கிளம்பிய உக்ரைன் நாட்டு விமானம் ஈரானில் விழுந்து நொறுங்கியுள்ளது.

Iran Ukrainian Plane With 180 On Board Crashes After Takeoff

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து உக்ரைன் நாட்டு போயிங் 737 ரக விமானம் ஒன்று 176 பேருடன் கிளம்பியுள்ளது. இதையடுத்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே அந்த விமானம் டெஹ்ரான் அருகே விழுந்து நொறுங்கியுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கோர விபத்தில் விமானத்தில் இருந்த 176 பேரும் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையே போர் பதற்றம் நீடித்துவரும் நிலையில் இந்த விபத்து நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்து ஈரான் அரசு தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளது.

Tags : #ACCIDENT #PLANE #CRASH #IRAN #AMERICA #UKRAINIAN