‘ஒரு நிமிட’ கவனக்குறைவால்.. ‘கண் இமைக்கும் நேரத்தில்’ நடந்த கோர விபத்து.. ‘24 பேர்’ பலியான பயங்கரம்..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Dec 02, 2019 11:56 AM

துனிசியாவில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட பயங்கர விபத்தில் 24 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

Accident 24 Killed After Bus Falls Off Cliff In Tunisia

ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் அய்ன் ஸ்னோஸி என்ற இடத்தில் தனியாருக்கு சொந்தமான பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்துள்ளது. 43 பயணிகளுடன் பயணித்த அந்தப் பேருந்து வளைவான சாலையில் போய்க்கொண்டிருந்தபோது, ஓட்டுநர் அடுத்த வளைவை கவனிக்காததால் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அருகில் இருந்த பள்ளத்திற்குள் கவிழ்ந்துள்ளது.

இந்த பயங்கர விபத்தில் பேருந்தில் பயணித்த 24 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் இதில் படுகாயமடைந்த 18 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Tags : #ACCIDENT #BUS #TUNISIA #DEAD