மொத்த டீமையும் இப்படி போட்டுக் கொடுத்துட்டாரே!.. ஹிட்மேனின் ஹிட் அடித்த வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | May 27, 2019 04:19 PM
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடங்க ஓரிரு நாட்களே உள்ள நிலையில், வேர்ல்டு கப் ஃபீவர் தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் கிரிக்கெட்டுக்கென்றே இருக்கும் ஏகோபித்த ரசிகர்களைக் கவரும் விதமாக, ஐசிசி புதிய பல முயற்சிகளை எடுத்து வருகிறது. அவ்வகையில் முன்னதாக உலகக் கோப்பை கிரிக்கெட்டில் மோதவுள்ள வெவ்வேறு அணிகளின் கேப்டன்களுக்கிடையிலான உரையாடலை நிகழ்த்தியது.
அந்த வீடியோவை ஐசிசி, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் வெளியிட்ட பிறகு அந்த வீடியோவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை அடுத்து, தற்போது இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோஹித் ஷர்மா ராப்பிட் ஃபயர் கேள்விகளுக்கு சலிக்காமலும், சளைக்காமலும், ஃபயர் மாதிரி பதில் சொல்லும் வீடியோவினை ஐசிசி வெளியிட்டுள்ளது.
‘இவரை ஹிட்மேன் என்றழைப்பதற்கான காரணம் இதுதான்’ என்கிற டேக்லைனுடன் இந்த 15 நொடி வீடியோவை ஐசிசி பகிர்ந்துள்ளது. அதில் ரோஹித் பல கேள்விகளுக்கு தீயாய் பதிலளிக்கிறார்.
அதில் செல்ஃபி பிரியரும் மோசமான டான்சரும் ஹர்திக் பாண்ட்யா என்றும், ஷிகர் தவான் பாடுவதில் ஆர்வமானவர் என்றும், ரொமாண்டிக் காமெடிகளை புவனேஷ்வர் குமார் அதிகம் விரும்புபவர் என்றும், ஷிகர் தவான்தான் ஒரு மோசமான ரூம் மேட் என்றும், தன்னைப் பற்றியே கூகுளில் அதிகம் தேடும் நபர் மீண்டும் ஹர்திக் பாண்ட்யாதான் என்றும், எப்போதும் ஜிம்மில் இருப்பவர் கேப்டன் விராட் கோலி என்றும், அணியில் தான்தான் பெரிய காபி பிரியர் என்றும், எப்போதும் தாமதமாக வருபவர் என்கிற கேள்விக்கு அணியில் எந்த வீரரும் அப்படி இல்லை என்றும் ஆனால், பேட்டிங் கோச் சஞ்சய் பங்கர் அப்படி லேட்டாக வருவார் என்றும், குல்தீப் யாதவும் ஹர்திக் பாண்ட்யாவும் எப்போதும் போனும் கையுமாக இருப்பவர்கள் என்றும்’ பதிலளித்துள்ளார்.
இந்த வீடியோ இணையத்தில் ஹிட் அடித்துள்ளது.
Rohit Sharma dishes the dirt on his teammates.
They don't call him The Hitman for nothing 😂 pic.twitter.com/PUPsn56Xhx
— ICC (@ICC) May 27, 2019
