'சச்சினுக்கு' விளையாட்டு உலகின் மிக உயரிய... 'லாரியஸ்' விருது வழங்கப்பட்டது... 'விருதுக்கு' தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான 'சுவாரஸ்ய' நிகழ்வு எது தெரியுமா?...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுவிளையாட்டு உலகின் மிக உயரிய அங்கீகாரங்களில் ஒன்றாக கருதப்படும் லாரியஸ் விருது சச்சின் டெண்டுல்கருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஜெர்மனியில் வழங்கப்படும் இந்த விருது சற்று வித்தியாசமாக விளையாட்டு உலகின் மிக சிறந்த தருணங்கள் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த 20 ஆண்டுகளில் விளையாட்டு உலகின் சிறந்த தருணமாக, இந்திய கிரிக்கெட் அணியின் சச்சின் டெண்டுல்கரை, 2011 உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் வென்ற பின், வீரர்கள் தோளில் சுமந்து சென்ற நிகழ்வு அதிக வாக்குகள் பெற்று தேர்வானது.ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்டீவ் வாக் இந்த விருதை சச்சினுக்கு வழங்கினார்.
கடந்த ஆண்டு இந்த விருது நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்சி மற்றும் பார்முலா ஒன் கார் பந்தயத்தில் 6 முறை சாம்பியன் பட்டம் வென்ற ஹாமில்டன் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது.
விருது பெற்ற பின் பேசிய சச்சின் டெண்டுல்கர், “இது மிகவும் சிறப்பு மிக்கது. உலக கோப்பையை வென்ற போது இருந்த உணர்வுகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஒட்டு மொத்த நாடும் அந்த தருணத்தை கொண்டாடியது” என்றார்.
