நாடு திரும்ப 'சிறப்பு' ஏற்பாடுகள் செய்யப்பட்டும்... 'புதிய' பிரச்சனையால்... அமெரிக்க வாழ் இந்தியர்கள் 'தவிப்பு'...
முகப்பு > செய்திகள் > உலகம்இந்திய அரசு விதித்துள்ள விசா கட்டுப்பாடுகளால் அமெரிக்க வாழ் இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் மே 17ஆம் தேதி வரையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வர சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு, பாதுகாப்பு அம்சங்களுடன் அவர்கள் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர். இதையடுத்து இந்திய அரசு தற்போது விதித்துள்ள விசா கட்டுப்பாடுகளால் வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்தியாவுக்குத் திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவிலுள்ள இந்தியர்கள் ஏர் இந்தியா விமானங்கள் மூலம் இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டாலும், அவர்கள் நாடு திரும்புவதில் ஒரு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஹெ1பி விசா அல்லது கிரீன் கார்டு பெற்ற இந்தியர்கள் இந்தியாவுக்கு வர முடியும். எனினும் இந்திய அரசு விதித்துள்ள விசா கட்டுப்பாடுகளின்படி, அவர்களுடைய குழந்தைகள் அமெரிக்காவில் பிறந்து அந்நாட்டு குடியுரிமை பெற்றிருந்தால் அவர்கள் இப்போது இந்தியாவுக்கு வர முடியாது.
அமெரிக்காவிலும் அவர்கள் 60 நாட்களுக்கு மட்டுமே வசிக்க முடியும் என்பதால் அவர்கள் அங்கேயும் இருக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் 60 நாள் என்ற கால அவகாசத்தை 180 நாட்களாக நீட்டிக்க வேண்டுமெனவும், அமெரிக்க வாழ் இந்தியர்களுக்கு இந்திய அரசோ அல்லது அமெரிக்க அரசோ தகுந்த தீர்வு வழங்க வேண்டுமெனவும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.