"இது ரொம்ப புதுசா இல்லடா இருக்கு... உக்காந்து யோசிப்பாங்களோ?" - 'கொரோனா' உடையில் வந்து 'கொள்ளை' அடித்த கும்பல்! - அதிர்ச்சியில் 'நகைக்கடை' அதிபர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாநாடு முழுவதும் கொரோனா தொற்று காரணமாக மக்கள் அனைவரும் பொது இடங்களில் செல்லும் போது தொற்று ஏற்படாமல் இருக்க வேண்டி முகக்கவசம், கையுறைகள் போன்றவற்றை அணிந்து செல்கின்றனர். அதே வேளையில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் ஆகியோர் கொரோனா நோயாளிகளிடம் இருந்து தொற்று பரவாமல் இருக்க வேண்டி பாதுகாப்பு கவசங்களை (PPE Kits) அணிந்து பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டத்தில் கொள்ளையர்கள் சிலர், தங்களது அடையாளங்கள் தெரியாமல் இருக்க வேண்டி தனிநபர் பாதுகாப்பு உடையை அணிந்து கொண்டு அங்குள்ள நகைக்கடை ஒன்றில் கொள்ளையடித்துள்ளனர். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவியில் (CCTV) பதிவாகியிருந்தது. அந்த நகைக்கடையின் பின்பக்க சுவரை உடைத்த கொள்ளையர்கள் அது வழியாக புகுந்து சென்று கொள்ளையடித்துள்ளனர்.
மொத்தமாக 780 கிராம் தங்க நகைகளை கொள்ளையர்கள் திருடி சென்றதாக நகைக்கடை உரிமையாளர் போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளார். அங்கிருந்த சிசிடிவி (CCTV) காட்சிகளில் பதிவான காட்சிகளை கொண்டு போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். நாடு முழுவதும் கடும் பாதிப்புக்குள்ளான இப்படி ஒரு சூழ்நிலையிலும், திருடுவதற்கு புதிய வழிமுறைகளை கொள்ளையர்கள் கண்டுபிடிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
