"மச்சி... பப்ஜி விளையாடலாமா?".. "போன் இல்லயேடா!"... பப்ஜி மோகத்தால் சிறுவர்கள் விபரீதச் செயல்!.. அதிர்ச்சியில் உறைந்த காவல்துறை!
முகப்பு > செய்திகள் > இந்தியாபப்ஜி விளையாடுவதற்காக 19 செல்போன்களை இரண்டு சிறுவர்கள் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பப்ஜி என்ற மொபைல் விளையாட்டை பள்ளி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி விளையாடி வருகின்றனர். இந்த விளையாட்டுக்கு அடிமையாகி மன உளைச்சலுக்கு ஆளாகும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இந்த விளையாட்டால் பல குற்றச்சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் பப்ஜி விளையாடுவதற்காக 19 செல்போன்களை திருடிய இரண்டு சிறுவர்களை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர்.
தெற்கு டெல்லியில் உள்ள செல்போன் கடையை உடைத்து இரண்டாயிரம் ரொக்கம், செல்போன்கள், லூடோ, செஸ் போன்ற கேம்கள் விளையாடும் போர்டுகள் ஆகியவற்றை மர்மநபர்கள் எடுத்துச் சென்றனர். இதனை அடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் இரண்டு சிறுவர்களை கைது செய்தனர்.
கைதுக்கு பிறகு போலீசாரிடம் உண்மையை ஒப்புக்கொண்ட சிறுவர்கள், தங்களிடம் செல்போன் இல்லை என்றும், நண்பர்களுடன் இணைந்து பப்ஜி விளையாடுவதற்காக செல்போன்களை திருடியதாகவும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மற்ற செய்திகள்
