'கிருமிநாசினி' தெளிக்கணும் சார்... நள்ளிரவில் ரூ.13 லட்சத்தை 'கொள்ளையடித்து' சென்ற நபர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தனியார் வங்கி ஏடிஎம்-மில் இருந்து ரூபாய் 13 லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சென்னை மதுரவாயல் அருகே தனியார் வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் ஒன்று உள்ளது. நள்ளிரவில் ஆட்டோவில் வந்த மர்மநபர் அங்கிருந்த காவலாளியிடம் கிருமிநாசினி தெளிக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.இதை நம்பிய காவலாளி அவரை உள்ளே அனுமதிக்க, உள்ளே சென்ற அந்த மர்மநபர் சாவி போட்டு ஏடிஎம் மையத்தை திறந்து பணத்தை எடுத்துள்ளார்.
அவர் பணம் எடுப்பதை பார்த்து அங்கிருந்த பணம் எடுக்க வந்த நபரும் அந்த மர்ம நபரை, வங்கி ஊழியர் என நினைத்துள்ளார். பணம் முழுவதையும் எடுத்துக்கொண்ட அந்த மர்மநபர் அங்கிருந்து வெளியே கிளம்பி விடவே சந்தேகமடைந்த பணம் எடுக்க வந்த நபர் காவலாளியிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து காவலாளி வங்கி மேலாளருக்கு தகவல் கொடுக்க, தொடர்ந்து அங்கு வந்த போலீசார் ஏடிஎம்-மில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர்.
ரூபாய் 13 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டதாக வங்கி சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கொள்ளையில் வங்கி ஊழியர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மற்ற செய்திகள்
