‘தாயான அடுத்த ஒரு மணி நேரத்தில்’ பெண் செய்த காரியம்.. இணையத்தில் குவியும் பாராட்டுக்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | May 13, 2019 05:34 PM
இந்தியாவில் 2019 லோக் சபா தேர்தல் ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கி மே 19 வரை 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.
இன்றைய 6வது கட்ட வாக்குப்பதிவில் ஹரியானாவின் கைதல் மாவட்டத்தில் மனிஷா ராணி என்பவர், தனக்கு குழந்தை பிறந்து ஒரு மணி நேரத்தில் அக்குழந்தையுடன் வாக்கு சாவடிக்குச் சென்று வாக்களித்துள்ளார். அனைவருக்கும் முன்னுதாரணமாக இருப்பார் என பலரும் இவரைப் பாராட்டி வருகின்றனர்.
இதேபோல், ஹிஸார் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளியான கௌசிக் என்பவர் வாக்களித்துள்ளார். இரண்டு கைகளும் இல்லாத இவருக்கு கால் விரலில் மை வைக்கப்பட்டது. ஒரு தேர்தல் தவறாமல் வாக்களிக்கும் இவர் இதன்மூலம் வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தி அனைவரையும் வாக்களிக்க வைக்க விரும்புவதாகக் கூறியுள்ளார்.
தவிர, வயதானவர்கள், நோயுற்றவர்கள், புதுமணத் தம்பதி என பலரும் ஆர்வமுடன் வந்து வாக்களித்துள்ளனர். ஆனாலும் வயதானவர்களுடன் ஒப்பிடுகையில் இளம் வாக்காளர்களின் பங்களிப்பு குறைவாகவே உள்ளதாகக் கூறப்படுகிறது.