‘எனக்கு நம்பிக்கை இருக்கு, நீங்களும் நம்பிக்கையோடு இருங்க’!.. தொண்டர்களுக்கு பிரியங்கா காந்தியின் பதில்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Arunachalam | May 21, 2019 12:34 PM
கருத்துக் கணிப்புகள் தொடர்பாக காங்கிரஸ் தொண்டர்களுக்கு பிரியங்கா காந்தி ஓர் செய்தியை தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்த நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளது. இதில் மீண்டும் பாஜகதான் ஆட்சிக்கு வரும் என்றும். மேலும்,அந்தக் கட்சி 300 இடங்களில் வெற்றி பெறும் என பாஜகவிற்கு ஆதரவாக கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கருத்துக் கணிப்புகள் பற்றி காங்கிரஸ் தொண்டர்களுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியதாவது, “எனது அருமை காங்கிரஸ் தொண்டர்களே, சகோதர, சகோதரிகளே வதந்திகள் மற்றும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளுக்கு ஏமாந்து விடாதீர்கள். இந்த அனைத்து விஷயங்களுக்கு மத்தியிலும் நீங்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறைக்கு வெளியே மிக கவனத்துடன் பாதுகாப்பை மேற்கொள்ளுங்கள். நாம் அனைவரும் சேர்ந்து எடுத்த முயற்சி நமக்கு நல்ல பயனைத் தரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்று ஆடியோ மூலம் காங்கிரஸ் தொண்டர்களிடம் பேசியுள்ளார்.
இதேபோல் மேற்கு வங்கம் முதல்வர் மம்தா, கர்நாடக முதல்வர் குமாரசாமி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு என பலரும் கருத்துக் கணிப்புகள் பற்றிய தங்களுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
