'ஓட்டுலாம் போடக்கூடாது.. புரியுதா?' முதல் நாளே விரலுக்கு மை வெச்சிவிட்ட கட்சி?
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | May 19, 2019 04:18 PM
உத்தரப் பிரதேச மாநிலம் சந்தவுலியில் வாக்குப் பதிவிற்கு முன்னரே கிராமத்தினருக்கு விரலில் மை வைத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட கிராமத்தினர் கூறுகையில், “தேர்தலுக்கு முந்தைய நாளான சனிக்கிழமை இதே கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேர் எங்களை அணுகினர். யாருக்கு ஓட்டுப் போடுவீர்கள் எனக் கேட்ட அவர்கள் வலுக்கட்டாயமாக எங்களுக்கு விரலில் மை வைத்துவிட்டு 500 ரூபாயையும் கொடுத்தனர். இனிமேல் நீங்கள் யாருக்கும் ஓட்டுப் போட முடியாது. இதை யாரிடமும் சொல்ல வேண்டாம்” என அவர்கள் சொல்லிச் சென்றதாகக் கூறியுள்ளனர். அந்த மூன்று பேரும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் எனவும் கிராம மக்கள் கூறியுள்ளனர்.
இது குறித்துப் பேசியுள்ள சப்-டிவிஷ்னல் மாஜிஸ்ட்ரேட் கே.ஆர்.ஹர்ஷ், “இது சம்பந்தமான வழக்கு காவல் நிலையத்தில் உள்ளது. தேர்தலுக்கு முன் விரலில் மை வைத்ததால் அது செல்லாது. அவர்கள் அனைவரும் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்” எனக் கூறியுள்ளார்.
