“அட இந்த பட்டன அழுத்துங்கமா”!.. ‘எங்க கட்சிக்குதான் ஓட்டுபோடனும்’!.. வாக்குச்சாவடியில் பூத் ஏஜெண்ட் செய்த செயல்! வைரலாகும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Arunachalam | May 13, 2019 11:58 AM

வாக்குப்பதிவு நடைபெறும்போது வாக்காளர்களை தங்கள் கட்சிக்கு வாக்களிக்க கூறி நிர்பந்தித்ததாக ஹரியானாவில் பூத் ஏஜெண்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.

booth agent arrested for influencing voters in the booth in faridabad

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடக்கும் மக்களவைத் தேர்தலில் 59 தொகுதிகளுக்கு நேற்று 6 ஆம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. இதில், ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் பூத் ஏஜெண்ட் ஒருவர் அத்துமீறி நடந்தது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, வெளியாகியுள்ள வீடியோவில் வாக்களர்கள் வாக்களிப்பதற்கான பட்டனை அழுத்த வரும்நேரத்தில், இந்த பட்டனை அழுத்துங்கள் என அந்த பூத் ஏஜெண்ட் கூறுவது போல் உள்ளது. மேலும், உன்னிப்பாக கவனித்தால் அந்த பூத் ஏஜெண்டே குறிப்பிட்ட பட்டனை அழுத்துவது போன்றும் அந்த வீடியோவில் உள்ளது.

இந்நிலையில், இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதனையடுத்து, தேர்தல் ஆணையம் அந்த பூத் ஏஜெண்ட் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளது. மேலும், அவர் எந்த கட்சியை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

 


 

Tags : #LOKSABHAELECTIONS2019 #HARYANA