‘பல அதிரடி மாற்றங்களுடன் இறுதிப்பட்டியலை வெளியிட்ட இங்கிலாந்து’.. சவாலை சமாளிக்க காத்திருக்கும் இந்தியா!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | May 21, 2019 11:24 PM

முக்கிய சில மாற்றங்களுடன் உலகக்கோப்பையில் விளையாடும் வீரர்களின் இறுதிப்பட்டியலை இங்கிலாந்து வெளியிட்டுள்ளது.

World Cup 2019: England World Cup squad

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் ஏற்கனவே அறிவித்திருந்த 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலில் 3 முக்கிய மாற்றங்களை இங்கிலாந்து செய்துள்ளது. இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி கடந்த சில ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளில் சிறப்பக ஆடிவருகிறது.

ஒருநாள் போட்டிகளில் நம்பர் ஒன் இடத்தில் இருந்து வரும் இங்கிலாந்து அணி இந்த முறை கோப்பையை வெல்ல வாய்ப்பு உள்ளதாக இந்திய முன்னாள் வீரர் கவஸ்கர் மற்றும் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ரிக்கிப் பாண்டிங் போன்ற பல ஜாம்பவான்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இங்கிலாந்து அசத்தியுள்ளது.

இந்நிலையில் உலகக்கோப்பையில் விளையாட உள்ள வீரர்களின் இறுதிப்பட்டியலை இங்கிலாந்து வெளியிட்டுள்ளது. அதில் ஏற்கனவே இடம்பெற்றிருந்த அலெக்ஸ் ஹேல்ஸ், டேவிட் வில்லி, ஜோ டென்லி ஆகிய மூவரும் நீக்கப்பட்டு வின்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், டாவ்சன் ஆகிய மூவரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Tags : #ICCWORLDCUP2019 #ENGLANDCRICKET #SQUAD