'முதன் முதலாக வாக்களித்ததால்' வைரலாகும் தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | May 20, 2019 12:15 PM

தலை ஒட்டியபடி பிறந்த சகோதரிகள் முதன் முதலில் தங்கள் வாக்கினை பதிவு செய்துள்ள நிகழ்வு வைரலாகி வருகிறது.

Conjoined sisters cast their votes with independent voting rights

இந்தியா முழுவதும் உள்ள 543 மக்களவைத் தொகுதிகளுக்கான நாடாளுமன்றத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி, 7 கட்டங்களாக நடைபெற்றது. முன்னதாக இவற்றுள் 6 கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெற்ற நிலையில் தற்போது 7-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

பீகாரின் பாட்னா பகுதியில், 19 வயதான தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் முதல்முறையாக தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். சபா மற்றும் பராஃஹ் என்கிற பெயர்களுடைய இந்த சகோதரிகள் தலைகள் ஒட்டிப் பிறந்தவர்கள். இவர்கள் தற்போது 19 வயதை அடைந்த நிலையில், பீகாரின் பாட்னாவில் உள்ள வாக்கு சாவடிக்குச் சென்று தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

பீகாரில் , ஹிமாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், பஞ்சாப், மத்தியபிரதேசம், உத்தரப்பிரதேசம், சண்டீகர் என மொத்தம் 59 தொகுதிகளில் நடந்தேறிய இந்த வாக்குப்பதிவில், இந்த பாட்னா பகுதியில் பிறந்த இந்த இளம் பெண்கள் தங்கள் உடலையும் பொருட்படுத்தாமல், நாட்டின் தலையெழுத்து மாறவும், தனிமனித வாழ்வு தரம் பெறவும் வேண்டியும், ஓட்டுப் போடச் சென்றுள்ளனர்.

Tags : #LOKSABHAELECTIONS2019 #BIHAR #PATNA #RIGHTS #VOTE