என்னது 143% வாக்குப் பதிவா..? உலகின் உயரமான வாக்குச்சாவடியில் நடந்த விநோதம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | May 20, 2019 05:51 PM
உலகின் உயரமான வாக்குச்சாவடியான இமாச்சல பிரதேசம் மாநிலத்தின் தாஷிகேங் வாக்குச்சாவடியில் 143% வாக்குகள் பதிவாகிய விநோதம் நடைபெற்றுள்ளது.
கடல் மட்டத்திலிருந்து 15,256 அடி உயரத்தில் இருக்கும் இந்த வாக்குச்சாவடியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கையே 49 தான். ஆனால் இங்கு மொத்தமாக 70 வாக்குகள் பதிவாகியுள்ளன. அவை அனைத்துமே செல்லும் வாக்குகள் என்பதே இங்கு சுவாரஸ்யம்.
49 வாக்காளர்களில் 36 பேர் வாக்களித்துள்ள நிலையில், தாஷிகேங் வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் பக்கத்து வாக்குச்சாவடி அலுவலர்கள் செலுத்திய 34 வாக்குகளையும் சேர்த்துதான் இங்கு 142.85% வாக்குகள் பதிவாகியுள்ளன. பொதுவாக தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தபால் மூலமாகவே வாக்கு செலுத்த முடியும். ஆனால் தாஷிகேங் மற்றும் அதற்கு அருகில் பணியாற்றிய அலுவலர்கள் உலகின் உயரமான வாக்குச்சாவடியில் வாக்களிக்க வேண்டுமென விரும்பியதால், தேர்தல் ஆணையம் அவர்களுக்கு அதற்கான அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டு தேர்தலில் இமாச்சல பிரதேசத்தின் ஹிக்கீம் கிராமத்தில் 14,356 அடியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியே இதுவரை உலகின் உயரமான வாக்குச்சாவடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.