‘நான்தான் ஒரிஜினல், அவர்தான் என்ன மாதிரி இருக்கார்’.. களத்தில் இறங்கிய மோடி போன்ற ஒத்த உருவம் கொண்டவர்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Selvakumar | May 14, 2019 02:42 PM

இந்திய பிரதமர் மோடியை போன்ற ஒத்த உருவம் கொண்ட முதியவரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

PM Modi lookalike to contest against BJP in Lucknow

உத்திரபிரதேச மாநிலம் லக்னோவில் 58 வயதான அபிநந்தன் பதக் என்பவர் வசித்து வருகிறார். இவர் கிட்டதட்ட தோற்றத்தில் இந்திய பிரதமர் மோடியைப் போல் உள்ளார். அதுமட்டுமல்லாமல் பிரதமரை போன்ற உடை, தாடி என அனைத்திலும் ஒரே மாதிரி இருந்து ஆச்சரியப்பட வைத்துள்ளார். மேலும் இவர் பாஜகவுக்கு எதிராக மக்களவைத் தேர்தலில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகவும் போட்டியிடுகிறார்.

இந்நிலையில் பிரதமர் மோடியை போன்ற ஒத்த உருவம் உள்ளது குறித்து தனது கருத்துக்களை அபிநந்தன் பகிர்ந்துள்ளார். அதில்,‘ நான்தான் உண்மையான மோடி என நினைத்து செல்லும் இடமெல்லாம் மக்கள் அருகில் வந்து புகைப்படம் எடுத்து செல்கின்றனர். பலர் நான்தான் உண்மையான மோடி என நினைத்தவர்களும் உள்ளனர். அதே நேரத்தில் அவரது வாக்குறிதிகளை கூறி என்னை விமர்சனம் செய்தவர்களும் உண்டு. கடந்தமுறை பாஜகவுக்கு ஆதரவு அளித்தேன். ஆனால் அவர் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றாததால், இந்தமுறை அந்த கட்சிக்கு எதிராக போட்டியிடுகிறேன். நான் அரசியலில் கடந்த 1990 -ல் இருந்தே ஈடுப்பட்டு வருகிறேன். அதனால் நான்தான் ஒரிஜினல் அவர்தான் என்னை போல் உள்ளார்’ என அபிநந்தன் பதக் தெரிவித்துள்ளார்.

Tags : #ABHINANDANPATHAK #NARENDRAMODI #VIRAL #LOKSABHAELECTIONS2019 #UTTARPRADESH