'எப்டி ஃபீல் பண்றேன்னா?' .. குகை மெடிட்டேஷன் எக்ஸ்பீரியன்ஸ் பற்றி பிரதமர் மோடி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | May 19, 2019 10:36 AM

மக்களவைத் தேர்தலிலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நிகழும் நிலையில், பிரதமர் மோடியின் குகை தியானம், ஆன்மீக பயணம் எல்லாம் வைரலாகி வருகின்றன.

PM modi opens up on recent meditation in kedarnath temple

2 நாள் பயணமாக உத்ரகாண்டுக்கு சென்ற மோடி, அங்குள்ள கேதார்நாத் புனிதக் குகைக் கோயிலில் விடிய விடிய தியானத்தில் ஈடுபட்டுவிட்டு, பின்னர் பத்ரிநாத்துக்கு புறப்பட்டார். தியானம் செய்து முடித்த பின்னர், பத்திரிகையாளர்களை சந்தித்த பிரதமர் மோடி கேதார்நாத் வழிபாடு பற்றி பேசியுள்ளார்.

அதன்படி, 29 ஆண்டுகளுக்கு பிறகு, கேதார்நாத்தில் வழிபட்டதை தான் மிகவும் அதிர்ஷ்டமாக நினைப்பதாகவும், தனக்கும் கேதார்நாத்துக்கும் ஒரு உணர்வுப்பூர்வமான உறவு உள்ளதாகவும் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, கொடுப்பதற்காகவே நாம் படைக்கப்பட்டதாகவும், எடுப்பதற்காக இல்லை என்றும் கூறி அதிரவைத்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், கேதார்நாத்தின் வளர்ச்சிக்காக, தான் மேலும் பணியாற்றிக்கொண்டிருப்பதாகவும் கூறிய மோடி, இந்தியர்கள் வெளிநாட்டுக்குச் செல்வது தவறில்லை, ஆனால் நம் நாட்டில் சுற்றிப்பார்ப்பதற்கென்று இருக்கும் பல இடங்களையும் காண வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

Tags : #NARENDRAMODI #LOKSABHAELECTIONS2019 #BJP #KEDARNATHTEMPLE