‘வினையான விளையாட்டு’.. வெள்ளத்தில் சிக்கி கதறிய சிறுவர்கள்.. பரபரப்பு வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாவிளையாட்டாக ஆற்றைக் கடக்க முயன்று 4 சிறுவர்கள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இமாச்சல பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கடுமையாக மழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சம்பா மாவட்டம் பட்டியாத் பகுதியில் உள்ள ஹோபர்டி காட் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த பகுதியை சேர்ந்த 4 சிறுவர்கள் விளையாட்டாக ஆற்றைக் கடந்து மறுகரைக்கு செல்ல முயன்றுள்ளனர். அப்போது திடீரென வெள்ளப்பெருக்கு அதிகரித்ததால் சிறுவர்கள் ஆற்றில் சிக்கிக்கொண்டனர்.
இதனை அடுத்து அருகில் உள்ள பாறைகளை பிடித்துக்கொண்டு கூச்சலிட்டுள்ளனர். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் கடுமையாக போராடி சிறுவர்களை பத்திரமாக மீட்டனர். இமாச்சல பிரதேசத்தில் இந்த ஆண்டு வழக்கமானதை விட அதிகமாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்தது குறிப்பிடத்தக்கது. இதனால் நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கு ஏற்படும் பகுதிகளில் அம்மாநில அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
Himachal Pradesh: Locals rescued four children who were trapped in a flash flood in Bhattiyat area of Chamba district, yesterday. pic.twitter.com/Cmbbr0kXZY
— ANI (@ANI) June 10, 2020