'எங்களுக்கு அவன் ஒரே புள்ள'... 'பரிதாபமாக சிக்கி கொண்ட பி.டெக் மாணவன்'... பரிதவிப்பில் பெற்றோர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Mar 24, 2020 12:51 PM

புராஜக்ட் செய்வதற்காக மலேசியா சென்ற என்ஜினீயரிங் மாணவன் தற்போது அங்கு சிக்கி இருப்பது அவர்களது பெற்றோரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Coimbatore : Parents requests to rescue their son from Malaysia

கோவை சங்கனூர் ரோடு தெய்வநாயகி நகரை சேர்ந்தவர் முத்துராமன். இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவருடைய மனைவி கல்பனா. இவர்களின் ஒரே மகன் முகேஷ் வைத்யா. இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் (மெக்கானிகல்) இறுதி ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இறுதி ஆண்டு என்பதால் கடைசி 2 மாதம் புராஜக்ட் செய்ய வேண்டும்.

இதற்காக முகேஷ் வைத்யா கடந்த ஜனவரி மாதம் 29-ந் தேதி மலேசியா சென்றார். அங்குள்ள பல்கலைக்கழகத்தில் படித்து கொண்டு, புராஜக்ட் வேலைகளில் முகேஷ் தீவிரமாக ஈடுபட்டு கொண்டிருந்தார். இந்த சூழ்நிலையில் கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் வேகமாக பரவியது. இதனை சற்றும் எதிர்பார்க்காத அவர், அங்கிருந்து இந்தியா வர முயற்சி செய்தார். ஆனால் அவர் கோவை வருவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதையடுத்து முகேஷ் வைத்யாவின் பெற்றோர் கோவை மாவட்ட கலெக்டர் ராஜாமணியை நேற்றுக்காலை சந்தித்து தங்கள் மகனை மீட்டு வர உதவி செய்யுமாறு கோரி மனு கொடுத்தனர். அதன்பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், ''மேற்படிப்புக்காக மலேசியா சென்ற எங்கள் மகன் கொரோனா வைரஸ் பீதி காரணமாக அங்கு சிக்கிக்கொண்டுள்ளார். அங்கிருந்து இந்தியா வரும் விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு விட்டன. தற்போது எங்கள் மகன் மலேசியாவில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் பராமரிப்பில் உள்ளார்.

எனவே எங்கள் மகன் உள்பட அனைவரையும் மலேசியாவில் இருந்து மீட்டு இந்தியா அழைத்து வர உதவி செய்ய வேண்டும். இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் மனுக்கள் அளித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags : #CORONAVIRUS #MALAYSIA #COIMBATORE #RESCUE