ஊரு புல்லா 'ஃபிளைட்' விட ஆரம்பிச்சுட்டாங்க... ஆனா 'ஜூன்' மாதம் இறுதி வரை... ஊரடங்கை 'நீட்டித்து' உத்தரவிட்ட 'மாநிலம்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் நான்காம் கட்டமாக ஊரடங்கு மே மாதம் 31 - ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஊரடங்கை இன்னும் ஐந்து வாரங்களுக்கு நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இமாச்சலப் பிரதேசத்தில் இதுவரை 214 பேர் கொரோனா வைரஸ் தொற்று மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். 63 பேர் வரை குணமடைந்துள்ள நிலையில், 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அம்மாநிலத்திலுள்ள 12 மாவட்டங்களிலும் ஜூன் மாதம் 30 - ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிப்பதாக அம்மாநில முதல்வர் ஜெய் ராம் தாகூர் தெரிவித்துள்ளார்.
அம்மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கையில் ஒரு பகுதி ஹாமிர்பூர் மாவட்டதில் மட்டும் பதிவாகியுள்ளது. அந்த மாநிலத்தில் மட்டும் 63 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி, விமான போக்குவரத்து சேவைகளை மீண்டும் தொடங்கி வரும் நிலையில், இமாச்சலப் பிரதேச மாநிலம் ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
