'மீண்டும் ஜூன் 15-ம் தேதி நாடு முழுவதும் முழு ஊரடங்கு'... 'பரபரப்பான மக்கள்'... உண்மை நிலவரம் என்ன?
முகப்பு > செய்திகள் > தமிழகம்நாடு முழுவதும் மீண்டும் ஜூன் 15-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப் பட இருப்பதாகத் தகவல் வெளியான நிலையில், அதன் உண்மை நிலவரம் குறித்த தகவல் தற்போது தெரியவந்துள்ளது.
கொரோனா பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதே நேரத்தில் 5 வது கட்ட ஊரடங்கில், நாடு முழுவதும் பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது. இதைத்தொடர்ந்து அரசின் உத்தரவுப்படி உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதி, கால் டாக்ஸி, ஆட்டோ ஆகியவற்றுக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. பெரிய அளவிலான கடைகள், மத வழிபாட்டுத் தலங்கள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஜூன் 15-ம் தேதி முதல் மீண்டும் நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட இருப்பதாகத் தகவல் வெளியானது. வட மாநிலத்தின் பிரபல ஹிந்தி செய்தி நிறுவனத்தின் தலைப்பு செய்தியுடன் கூடிய ஊரடங்கு குறித்த புகைப்படம் வெளியானது. சமூக வலைத்தளங்களில் இந்த புகைப்படம் வைரலானதை அடுத்து மத்திய அரசு மீண்டும் ஊரடங்கு பிறப்பித்துள்ளது. விமானம் மற்றும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் அந்த செய்தி போலியானது என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. விஷமிகள் சிலர் ஹிந்தி செய்தி நிறுவனத்தின் புகைப்படத்தை மாற்றி வெளியிட்டுள்ளார்கள். இதன் மூலம் மத்திய அரசு ஊரடங்கு குறித்து எந்த ஒரு உத்தரவும் வெளியிடவில்லை என்பது உறுதியாகி உள்ளது.
உள்நாட்டு விமானச் சேவை மற்றும் ரயில் சேவைகள் தொடர்ந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த செய்தி போலியானது எனத் தெரியவந்துள்ளது.
दावा: सोशल मीडिया पर फैलाई जा रही एक फोटो में दावा किया जा रहा है कि गृह मंत्रालय द्वारा ट्रेन और हवाई यात्रा पर प्रतिबंध के साथ 15 जून से देश में फिर से पूर्ण लॉकडाउन लागू किया जा सकता है।#PIBFactcheck- यह #Fake है। फेक न्यूज़ फैलाने वाली ऐसी भ्रामक फोटो से सावधान रहें। pic.twitter.com/DqmrDrcvSz
— PIB Fact Check (@PIBFactCheck) June 10, 2020