'என்ன ஆனார் 'கஃபே காபி டே' நிறுவனர்'... தற்கொலையா?... அதிர்ச்சியில் உறைந்துள்ள குடும்பம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Jeno | Jul 30, 2019 10:20 AM
'கஃபே காபி டே' நிறுவனரும், கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனுமான வி.ஜி.சித்தார்த்தா திடீரென மாயமாகி இருப்பது அவரது குடும்பத்தினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
மிகவும் பிரபலமான காபி டே இந்தியா முழுவதும் பல கிளைகளை கொண்டுள்ளது. இதன் நிறுவனர் வி.ஜி.சித்தார்த்தா, கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகனாவார். பிரபல தொழிலதிபரான இவர், நேற்று இரவு திடீரென மாயமானார். இதையடுத்து அவர் தற்கொலை செய்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. காரில் சென்று கொண்டிருந்த அவர் திடீரென காரை நேத்ராவதி ஆற்றின் அருகில் நிறுத்த சொல்லிவிட்டு இறங்கி சென்றதாக அவரது ஓட்டுநர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் ''காரில் சென்று கொடிருந்த போது, நேத்ராவதி ஆற்றுப் பாலத்திற்கு அருகில் போக சொன்னார். இதையடுத்து பாலத்திற்கு அருகில் சென்ற போது, வாக்கிங் சென்றுவிட்டு வருகிறேன் என கூறி சென்றார். ஆனால் வெகு நேரம் ஆகியும் சித்தார்த்தா திரும்பி வராததால், ஓட்டுநர் காவல்துறையினருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்''. இதையடுத்து அந்த பகுதிக்கு வந்த போலீசாரும் தீயணைப்பு படையினரும் அவரை ஆற்றில் தேடி வருகின்றனர்.