'அய்யோ அப்படி இல்ல தாத்தா'.. 'முதியவர்களுக்கு பாடம்'...'குழந்தைகளை ஆசிரியர்களாக்கிய அரசுப்பள்ளி'!

முகப்பு > செய்திகள் > கதைகள்

By Siva Sankar | Oct 24, 2019 04:43 PM

ஆலப்புழாவில் உள்ள கடக்கரப்பள்ளி அரசு ஆரம்பப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு பயிலும் 9 வயது சிறுவன் 97 வயதான குமரன் என்பவருக்கு முதன் முதலில் கம்ப்யூட்டர் வகுப்பை இனிதே தொடங்கியிருக்கிறான்.

Govt school appoints little students to teach elders

நம்ம வீடு என்கிற பெயரில், பெரியவர்களுக்கு கணினி, எழுத்து, இசை, நடனம் என அனைத்தையும் பள்ளி பயிலும் சிறுவர்கள் சொல்லித்தரும் முயற்சியை முன்னெடுத்துள்ளனர். ஆரோக்கியமான இந்த போக்கினை 1-ஆம் வகுப்பு முதல் 4-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பெரியவர்களுக்கு பாடங்களைச் சொல்லித் தரும் விதமாக தொடங்கியுள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் பிளாஸ்டிக் ஒழிப்பு, இயற்கை வளர்ப்பு, மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுதல் என இந்த குழந்தைகள் எடுத்திருக்கும் முன்னெடுப்புகளுக்கும் பாராட்டுக்குள் குவிந்து வருகின்றன. 60 முதல் 100 வயது வரை இருக்கும் 100க்கும் மேற்பட்ட முதியவர்களுக்கு 300 குழந்தைகள் வெவ்வேறு நேரங்களில் அவர்களின் வீடுகளுக்கே சென்று மொழிப் பாடங்களும் எடுத்து வருகின்றன.

Tags : #KERALA #STUDENTS #EDUCATION