'விவாகரத்தான' கணவனுடன்.. மீண்டும் 'வீட்டைவிட்டு' ஓடிப்போன மனைவி.. என்ன காரணம்?

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Oct 10, 2019 02:05 PM

விவாகரத்து செய்த கணவனுடன் மனைவி மீண்டும் ஓடிப்போன சம்பவம் வைரலாகி வருகிறது.

Gujarat Women run away with her ex husband, goes viral

குஜராத் மாநிலம் கம்பீர்புரா கிராமத்தைச் சேர்ந்த சுகாபாய் தத்வியின் மகள் மீனாட்சி. இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த அணில் என்பவரைக் காதலித்து வந்தார். இவர்கள் திருமணத்துக்கு இருவரின் வீட்டாரும் சம்மதிக்கவில்லை.

இதனால் வீட்டைவிட்டு ஓடிப்போய் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இடையில் என்ன நடந்தது என தெரியவில்லை. இருவரும் கடந்த ஆகஸ்ட் மாதம் விவாகரத்து செய்து கொண்டு மீண்டும் தங்களது வீட்டிற்கே திரும்பி விட்டனர்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் அணிலுடன், மீனாட்சி வீட்டைவிட்டு ஓடிப்போய் விட்டார். இதனால் கோபமடைந்த மீனாட்சி வீட்டார் அணிலின் வீட்டிற்கு வந்து அவரின் தாயாரை அடித்து உதைத்துள்ளனர். இதுகுறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீனாட்சி வீட்டை சேர்ந்த நான்கு பேரை கைது செய்துள்ளனர்.

அணில்-மீனாட்சி இருவரும் மீண்டும் ஓடிப்போன காரணம் தெரியவில்லை. தற்போது இந்த சம்பவம் வைரலாகி வருகிறது.

 

Tags : #WEDDING