‘இது ஒன்னும் அவங்க தப்பில்ல.. மனுஷத் தன்மை இல்லாம நடந்துக்குறத ஏத்துக்கவே முடியாது!’.. கொரோனா விவகாரத்தில் கொதித்த பினராயி!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Mar 18, 2020 07:16 PM

கேரளாவில் சுற்றுலா மற்றும் ஹோட்டல் தொழில்கள் முடங்கியுள்ளதோடு, வெளிநாட்டு பயணிகள் மோசமான சூழலை அனுபவித்துள்ளதாகவும் கேரள முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.

kerala chief minister pinarayi vijayan talks about corona virus

இதுகுறித்து பேசிய அவர், கேரளத்தில் 17,743 பேர் வீடுகளிலும், 268-பேர் மருத்துவமனையிலும் என 18,011 பேர் கண்காணிப்பில் உள்ளதாகவும்,  இவர்களுள் புதிதாக 5,372 பேர் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், இதுவரை 4,353 பேருக்கு தொற்று இல்லை என்று உறுதி செய்து கண்காணிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசியவர், ‘கேரளாவில் சுற்றுலா, ஹோட்டல் தொழில் பாதித்துள்ளதாகவும் இதில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சில மோசமான அனுபவங்கள் உண்டாகிய விஷயத்தில் நம் மக்களின் செயல்பாடு ஏற்புடையதல்ல என்றும், கொரோனா பாதித்தது அவர்களின் தவறினால் அல்ல, இதேபோல் கேரளாவிலும் சிலருக்கு கொரோனா பாதித்தது, இதுவும் அவர்களின் தவற்றால் அல்ல’ என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வட கேரளத்துக்கு இத்தாலி, பிரான்ஸ், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் இருந்து வந்தவர்கள் தங்க இடமின்றியும், உணவின்றியும். குழந்தைகளை வைத்துக்கொண்டும் தவித்ததை குறிப்பிட்டு சாடிய முதல்வர், கொரோனாவை எதிர்க்க நாம் தயாராக இருக்க வேண்டும் என்றும் சொதனை மையங்கள் ஏற்படுத்தப்படுவதாகவும், அதனால் பேப்பர் போடுபவர்கள், பால் போடுபவர்கள் என யாராக இருந்தாலும் நோய் தீவிரமாக இருப்பதால் யாரும் மறைத்து வைக்காமல்  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் வி.வி.ஐ.பியாகவே இருந்தாலும் விமான நிலையத்தில் சோதனை செய்துதான் அனுப்பப்படுவார்கள் என்றும் செய்தியாளர்கள் கூட நெருக்கமாக சேர்ந்து அமரக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

Tags : #KERALA