கொரோனா 'சீல்' வச்ச வீட்டில் திருடர்கள்...! 'டேய் கிச்சன்ல மட்டன் இருக்கு...' 'அப்போ அதான் பர்ஸ்ட், மத்ததெல்லாம் நெக்ஸ்ட்...' - திருடர்கள் எடுத்த ரிஸ்க்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஜார்க்கண்ட் மாநிலத்தில் கொரோனா நோயாளி தனிமைப்பட்டிருக்கும் வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள் சாப்பாடு, மட்டன் தொக்கு மற்றும் சப்பாத்தி சமைத்து சாப்பிட்டு ரூபாய் 50,000 பணத்தையும் அள்ளிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்க்கண்டின் ஜாம்ஷெட்பூரின் ஹலுட்போனி பகுதியில் இருக்கும் ஒரு குடியிருப்பு பகுதியில் இருக்கும் ஒரு வீட்டிற்கு கடந்த வியாழக்கிழமை இரவு திருடன் ஒருவன் வீட்டினுள் நுழைந்துள்ளார். அந்த வீட்டின் உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டு டாடா பிரதான மருத்துவமனையில் (டி.எம்.எச்) சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் தான் கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்தி சீல் செய்யப்பட்ட அவரது வீட்டின் பின்புற கதவைத் திறந்து திருடர்கள் உள்ளே நுழைந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கொரோனா பாதித்து மருத்துவமனையில் இருக்கும் நோயாளியின் சகோதரர் வெள்ளிக்கிழமை வீட்டைச் சரிபார்க்க அங்கு சென்றபோது வீட்டின் பின்புற கதவு உடைந்து கிடப்பதை பற்றி அக்கம்பக்கத்தினர் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து காவல் நிலையம் சென்ற அவரின் சகோதரர், "திருடர்கள் மட்டன், அரிசி மற்றும் சப்பாத்திகளை சமைத்து சாப்பிட்டுவிட்டு, ரூபாய் 50,000 பணத்தையும் திருடியுள்ளனர்" என்று கூறி போலீஸில் புகார் அளித்துள்ளார். மேலும் தன் சகோதரர் மற்றும் அவரின் மனைவி, குழந்தைகள் தங்கள் சொந்த கிராமத்தில் கடந்த ஒரு மாதமாக தங்கியுள்ளதாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் டி.எஸ்.பி அதிகாரி, 'இங்குள்ள டாடா மெயின் ஆஸ்பத்திரியில் (டி.எம்.எச்) சிகிச்சை பெற்று வரும் கோவிட் -19 நோயாளியின் வீட்டில் இருந்து ரூ .50,000 ரொக்கம் மற்றும் நகைகளை திருடர்கள் திருடிச் சென்றனர்' என்று எச்.டி மேற்கோள் காட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு (டி.எஸ்.பி) கூறினார். மேலும், அப்பகுதியில் காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், கொள்ளை சம்பவம் குறித்தான விசாரணை நடந்து வருவதாகவும் கூறியுள்ளார்.