asuran US others

‘2 நாட்களில் ஆதாருடன் இணைக்காவிட்டால்’.. ‘பான் கார்டு காலாவதியாக வாய்ப்பு’.. ‘இணைப்பது எப்படி?’..

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Saranya | Sep 27, 2019 11:39 AM

பான் கார்டை ஆதாருடன் இணைக்காவிட்டால் 2 நாட்களுக்குப் பிறகு காலாவதியாக வாய்ப்பு எனத் தகவல் வெளியாகியுள்ளது.

PAN Aadhaar linking deadline on Sept 30 Heres how to link

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மத்திய அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் ஆதாருடன் இணைக்காவிட்டால் அக்டோபர் 1 முதல் பான் கார்டு செல்லுபடி ஆகாது என மத்திய நேரடி வரிகள் வாரியம் எச்சரித்துள்ளது. அதன்பிறகு புதிதாக விண்ணப்பித்தே பான் கார்டு பெற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பான் கார்டுடன் ஆதாரை இணைப்பது எப்படி?

1. https://www1.incometaxindiaefiling.gov.in/e-FilingGS/Services/LinkAadhaarHome.html?lang=eng என்ற தளத்திற்கு செல்லவும்.

2. அதில் பான், ஆதார் எண், ஆதாரில் உள்ள உங்களுடைய பெயர், கேப்ட்சா ஆகியவற்றை பூர்த்தி செய்யவும்.

3. பின் Link Aadhaar எனும் பட்டனை க்ளிக் செய்தால் பான் கார்டு ஆதாருடன் இணைக்கப்படும்.

4. ஏற்கெனவே உங்களுடைய பான் கார்டு ஆதாருடன் இணைக்கப்பட்டிருந்தால் அது குறித்த தகவலும் இங்கு வரும்.

Tags : #INDIA #PANCARD #AADHAAR #LINK #SEPTEMBER30 #OCTOBER01 #HOWTOLINK #DEADLINE