VIDEO: ' நீங்க முதல்ல 'இத' பண்ணுங்க... அப்புறம் 'அட்வைஸ்' பண்ணலாம்!'... சர்ச்சையாகிய கொரோனா விழிப்புணர்வு வீடியோ... எம்.பி-ஐ வருத்தெடுத்த நெட்டிசன்கள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Mar 20, 2020 01:03 PM

மேற்குவங்க பெண் எம்.பி நுஸ்ரத் ஜஹான் கொரோனா பரவாமல் இருக்க வெளியிட்டுள்ள வீடியோ சர்ச்சையாகி உள்ளது.

wb mp nusrath jahan covid19 awareness video criticised

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க மேற்கொள்ள வேண்டிய சுகாதார செயல்கள் குறித்து பிரபலங்கள் பலர் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில், மேற்குவங்க மாநில திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் எம்.பி. நுஸ்ரத் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

நுஸ்ரத் வெளியிட்டுள்ள வீடியோவில் கொரோனா பரவாமால் இருக்க தனது கைகளை சோப்பு போட்டு சுத்தமாக வைத்து கொள்ளும் வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில், “கொரோனா தாக்கமால் இருக்க முக்கியமான ஒன்றை நீங்கள் செய்ய வேண்டும். உங்கள் கைகளை சீரான இடைவெளியில் சுத்தம் செய்ய வேண்டும்“ என்றுள்ளார்.

அந்த வீடியோவின் போது தண்ணீர் குழாயை திறந்த அவர் மூடாமல் கைகளை சுத்தம் செய்தவாறே கொரோனா விழிப்புணர்வு குறித்து பேசியுள்ளார். தேவையில்லாமல் தண்ணீர் வீணாக்கியதாக பலர் அவரை விமர்சித்து வருகின்றனர். கொரோனா விழிப்புணர்வு இருக்கட்டும், முதலில் தண்ணீரை சேமியுங்கள் என்று நெட்டிசன்கள் கருத்தை பதிவிட்டுள்ளனர்.

 

 

Tags : #MP #WESTBENGAL #CORONAVIRUS