'சென்னை' டீமுக்கு எப்போ வருவீங்க?.. பொசுக்குன்னு 'பதில்' சொன்ன அஸ்வின்.. ரசிகர்கள் அதிர்ச்சி!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Nov 12, 2019 12:18 PM

ஐபிஎல் போட்டிகள் தொடங்க இன்னும் 6 மாதங்கள் இருக்கிறது. ஆனால் ஒவ்வொரு அணியும் வீரர்களை வாங்குவதும், விற்பதுமாக தற்போதே ஐபிஎல் சீசன் களைகட்டி விட்டது. சமீபத்தில் டெல்லி அணி அஸ்வினை மிகப்பெரும் தொகைக்கு வாங்கியது. இது கிரிக்கெட் உலகில் பலரது புருவத்தையும் உயர்த்தி உள்ளது.

Ashwin Reveals His Opinion On Making A Comeback To Chennai Super Kings

இந்தநிலையில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அஸ்வின் நேற்று முன்தினம்  ரசிகர்களிடம் சாட் செய்தார். அப்போது மீண்டும் சொந்த வீட்டுக்கு (சிஎஸ்கே) எப்போ வருவீங்க அண்ணா? என ரசிகர் ஒருவர் அஸ்வினிடம் கேட்டார். பதிலுக்கு அஸ்வின், '' உண்மையில் அங்கு செல்ல எனக்கு விருப்பம் இல்லை,'' என பதில் அளித்துள்ளார்.

2010, 2011 ஆண்டுகளில் சிஎஸ்கே அணிக்காக அஸ்வின் விளையாடி இருக்கிறார். அது தவிர தமிழ்நாடு அவரது சொந்த மண். அந்த அடிப்படையில் தான் ரசிகர் சொந்த வீடு என குறிப்பிட்டார். ஆனால் அஸ்வின் அதற்கு யாரும் எதிர்பாராத பதிலை சொல்லி இருக்கிறார்.