இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Manjula | Nov 25, 2019 12:33 PM
1. குரூப் 4 தேர்வுப் பணியிடங்களின் எண்ணிக்கையை 9 ஆயிரத்து 398 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
2. இந்திய அணியின் தேர்வுக்குழுவை மாற்ற வேண்டும் என இந்திய சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
3. வெங்காய பதுக்கலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப முடியாது என அமைச்சர் செல்லூர் ராஜு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
4. காவல்துறையில் அனைத்து தகவல் தொடர்புகளும் தமிழில் இருக்க வேண்டும் என டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
5. வரும் கல்வியாண்டில் பள்ளிகள் துவங்கிய ஒரு மாதத்தில் மாணவர்களுக்கு மடிக்கணினி, சீருடை வழங்கப்படும்- அமைச்சர் செங்கோட்டையன்.
6. ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
7. விராட் கோலி பிறப்பதற்கு முன்பாகவே இந்தியா வெளிநாடுகளில் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
8. நீதிமன்றத்தில் ஆஜராகாத விவகாரத்தில் நிர்மலா தேவி மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்.
9. மக்களவை பாதுகாவலர்கள் தங்களை பிடித்து தள்ளிவிட்டதாக கரூர் எம்பி ஜோதிமணி மற்றும் மற்றொரு பெண் எம்.பி ரம்யா ஹரிதாஸ் ஆகிய இருவரும் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
10. ஃபாஸ்டாக் அட்டையை தனியார் வங்கிகள் இலவசமாக வழங்குமாறு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.