என்ன 'வெலை' குடுத்தாவது... 'அவரை' ஏலத்துல எடுத்துருங்க... ரசிகர்கள் ரெக்வெஸ்ட்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Dec 19, 2019 01:18 AM

ஐபிஎல் ஏலம் இன்று கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறவுள்ள இந்த ஏலத்தில் கலந்துகொள்ள அனைத்து அணிகளும் கொல்கத்தா சென்றுள்ளன. இந்தநிலையில் ஒவ்வொரு அணியின் ரசிகர்களும் தங்களது பேவரைட் அணிகளிடம் சில வீரர்களை எப்படியாவது எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, அவர்களின் பெயர்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

IPL 2020: \'Please buy Maxwell\'.. fans request to CSK

குறிப்பாக சென்னை அணி ரசிகர்கள் ஏலத்தில் சொதப்ப வேண்டாம் என்று அன்புடன் எச்சரிக்கை விடுத்து சில வீரர்களின் பெயரை குறிப்பிட்டு அவர்களை ஏலத்தில் எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனர். குறிப்பாக ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல்லை என்ன விலை கொடுத்தாவது வாங்கி விடுங்கள் என்று ட்விட்டரில் தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்க, தற்போது ட்விட்டரில் Maxwell ட்ரெண்ட் ஆகி வருகிறார்.

அதேபோல பேட் கம்மின்ஸ், டாம் பேண்டன் ஆகியோரையும் ஏலத்தில் எடுக்க சொல்லி கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் மேற்கண்ட வீரர்களுக்கு நாளைய ஏலத்தில் கடும் கிராக்கி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

Tags : #CSK #IPL