‘2 வருசமா அந்த ரூபாய் நோட்டு அச்சடிக்கவே இல்ல’!.. அதனாலதான் ‘ஏடிஎம்’-ல அதிகமாக வரலையோ.. மத்திய அரசு முக்கிய தகவல்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகடந்த 2 ஆண்டுகளாக 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கவில்லை என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

மதிமுக ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி இதுதொடர்பாக மக்களவையில் கேள்வி எழுப்பி இருந்தார். அதில், 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் மிகவும் குறைவாக இருப்பதாகவும், வங்கி ஏடிஎம் இயந்திரங்களிலும் அவை கிடைப்பதில்லை என்றும் கணேசமூர்த்தி கேட்டிருந்தார்.
மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தியின் கேள்விக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார். அதில், 2016-ம் ஆண்டி பணமதிப்பிழப்புக்கு பின் அறிமுகப்படுத்தப்பட்ட ரூபாய் நோட்டுகளில், 2000 ரூபாய் நோட்டுகள் 2019-2020 மற்றும் 2020-2021 ஆகிய ஆண்டுகளில் அச்சகத்துக்கு அனுப்பவில்லை என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் தகவல் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
