'என் தங்கச்சி வேற ஒருத்தர லவ் பண்றா...' 'நீங்க இன்னொரு பொண்ண பாருங்களேன்...' 'கொடுத்த வாக்குறுதி...' 'மோசடி' வேலையில் ஈடுபட்ட 'மாமன்'.. அம்பலமான 'அதிர்ச்சி' பிளான்!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Mar 05, 2021 09:34 AM

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த முத்துபழநியூர் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணி. வடமாநிலங்களில் பைனான்ஸ் தொழில் செய்து வரும் பாலசுப்பிரமணிக்கு அறிவழகன், முருகன் ஆகிய நெருங்கிய நண்பர்கள் உண்டு.

dindigul Uncle engaged in fraud work in the name of marriage

இந்த பைனான்ஸ் தொழில் மூலம் பாலசுப்பிரமணி அதிகம் லாபம் பெற்று வந்துள்ள நிலையில், லாபத்தை சிறந்த முறையில் சேமிக்க அறிவழகனிடம் யோசனை கேட்டுள்ளார். ஒரே வங்கிக் கணக்கில் சேமித்தால் வருமான வரித்துறை பிரச்சனை வரும் என்பதால், 4 அல்லது 5 வங்கி கணக்குகளாக பிரித்து சேமிக்கலாம் என அறிவழகன் ஆலோசனை அளித்துள்ளார்.

அதன்படி, அறிவழகன், அவரது மனைவி கலைச்செல்வி, பாலசுப்பிரமணி பெயரில் இரண்டு கணக்கு, முருகன் உள்ளிட்ட ஐந்து வங்கிக் கணக்குகள் புதிதாக தொடங்கப்பட்டது. வங்கி கணக்கு விவரங்கள், பண பரிவர்த்தனைகள் உள்ளிட்டவற்றை அறிவழகனே செய்து வந்துள்ளார். அத்துடன், முருகன் மூலமாக திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் தனியாக பைனான்ஸ் செய்து லாபமும் பார்த்து வந்துள்ளார்.

இதனிடையே, பாலசுப்பிரமணியனின் தந்தை இறந்து போனார். இதனால், அவருக்கு பெண் பார்க்க ஆரம்பித்துள்ளனர். அத்தகைய சமயத்தில், அறிவழகன் தனது மனைவியின் தங்கை முத்துலட்சுமியை பாலசுப்பிரமணிக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பாலசுப்பிரமணியை நேரில் பார்த்து, முத்துலட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினரும் திருமணம் செய்து வைக்க சம்மதம் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு, வடமாநிலங்கள் சென்று, தனது பைனான்ஸ் தொழிலை செய்து, அதில் கிடைக்கும் பணத்தை அறிவழகனுக்கு அனுப்பி வந்துள்ளார். அது மட்டுமில்லாமல், திருமணத்திற்காக 45 பவுன் வரை முத்துலட்சுமி மூலமாக, பாலசுப்பிரமணியிடம் கேட்டு அதையும் பெற்றுள்ளனர். இது தொடர்பான தகவல் அனைத்தையும், பாலசுப்பிரமணி தனது நண்பர் முருகனிடமும் பகிர்ந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில், திடீரென முத்துலட்சுமி தொலைபேசியில் இருந்து பாலசுப்பிரமணியிடம் பேசிய கலைச்செல்வி, என் தங்கை வேறொருவரை காதலித்து வருவதால், நீங்கள் வேறு பெண்ணை பார்த்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பாலசுப்பிரமணி, அறிவழகன் மற்றும் முத்துலட்சுமி குடும்பத்தினரிடம் பேச முயற்சி செய்துள்ளார். ஆனால், முத்துலட்சுமி சம்மதம் தெரிவிக்காததால், திருமணம் செய்து வைக்க முடியாது என்பதில் அவர்கள் உறுதியாக இருந்தனர்.

அப்படியென்றால், நான் அனுப்பிய சுமார் 1 கோடி ரூபாய் பணமும், 45 பவுன் நகைகளை திருப்பித் தாருங்கள் என பாலசுப்பிரமணி கேட்டுள்ளார். அதற்கு அறிவழகன் மற்றும் அவரது சகோதரர்கள் இணைந்து பாலசுப்பிரமணியை மிரட்டியுள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பாலசுப்பிரமணி, தற்கொலை முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, மற்றொரு நண்பர் முருகன் உதவியுடன் திண்டுக்கல் எஸ்.பி அலுவலகத்தில் இந்த மோசடி சம்பவம் தொடர்பாக புகாரளிக்கப்பட்டது. இதன் பெயரில் நடைபெற்ற விசாரணையில், அறிவழகன், கலைச்செல்வி, முத்துலட்சுமி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Dindigul Uncle engaged in fraud work in the name of marriage | Tamil Nadu News.